#ENGvsIND 3வது டெஸ்ட்: இந்திய அணியில் என்னென்ன மாற்றம்..? உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Aug 22, 2021, 9:18 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3வது டெஸ்ட் போட்டி வரும் 25ம் தேதி நடக்கவுள்ளது. அடுத்த 3 டெஸ்ட்டிலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற அணி தேர்வு மிக முக்கியம்.

அந்தவகையில், 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வினை ஆடவைக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. 2வது டெஸ்ட் நடந்த லண்டன் லார்ட்ஸில் கடைசி நாள் பிட்ச் ஸ்பின்னிற்கு சாதகமாக இருந்தது. அஷ்வின் ஆடியிருந்தால், இன்னும் முன்னதாகவே இங்கிலாந்தை ஆல் அவுட் செய்து இந்திய அணி வெற்றி பெற்றிருக்கக்கூடும்.

எனவே 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அஷ்வின் நன்றாக பேட்டிங்கும் ஆடுவார். எனவே அவர் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. பேட்டிங்கை கருத்தில் கொண்டுதான் அஷ்வினை எடுக்காமல் ஜடேஜாவை எடுத்தனர். ஆனால் ஜடேஜா பேட்டிங்கில் பெரிதாக எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை. அதற்கு அஷ்வினே நன்றாக பேட்டிங்கும் ஆடுவார். பவுலிங்கும் சிறப்பாக வீசுவார். எனவே அடுத்த டெஸ்ட்டில் அஷ்வின் எடுக்கப்படலாம். 

அஷ்வின் யாருக்கு பதிலாக எடுக்கப்படுகிறார் என்பது பெரிய கேள்வி. ஏனெனில், இஷாந்த் சர்மாவை நீக்கிவிட்டு கூட அஷ்வினை எடுக்க வாய்ப்புள்ளது.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஜடேஜா/இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா, சிராஜ்.
 

click me!