பெரிய மனுஷத்தனமா பேசிய ஜோ ரூட்..! சென்னை பிட்ச்சை விமர்சித்தவர்கள் முகத்தில் கரியை பூசிய ரூட்

By karthikeyan VFirst Published Feb 16, 2021, 6:48 PM IST
Highlights

2வது டெஸ்ட் போட்டி நடந்த சென்னை ஆடுகளத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஜோ ரூட்டின் பேச்சு அப்படி விமர்சித்தவர்களுக்கான பதிலடியாக அமைந்துள்ளது.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட்  போட்டி சென்னையில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றதுதான், போட்டியின் முடிவையே தீர்மானித்தது.

ஏனெனில் இந்த போட்டியில் முதல் நாள் ஆட்டம் மட்டும்தான் பேட்டிங்கிற்கு ஓரளவிற்கு சாதகமாக இருந்தது. 2ம் நாள் காலை முதல் பந்து தாறுமாறாக திரும்பியதுடன், பவுன்ஸும் தாறுமாறாக இருந்தது. அதனால் பேட்டிங்கிற்கு சவாலாக இருந்தது. முதல் நாளில் பேட்டிங் ஆடியதால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 328 ரன்கள் அடித்தது. ஆனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 134 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ரோஹித், ரிஷப், ரஹானே, புஜாரா ஆகியோர் சொதப்பினாலும், மோசமான அந்த பிட்ச்சில் ஸ்பின்னை சமாளித்து கோலியும் அஷ்வினும் சிறப்பாக ஆடினர். 

கோலி 62 ரன்களும், சதமடித்த அஷ்வின் 106 ரன்களும் குவித்து, இந்திய அணியை 286 ரன்களை எட்டவைத்தனர். இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு சுருண்டதும், சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தை மோசமான ஆடுகளம் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ஆஸி., முன்னாள் வீரர் மார்க் வாக் ஆகியோர் விமர்சித்தனர். ஆனாலும் 2வது இன்னிங்ஸில் அந்த பிட்ச்சில் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்பதை அஷ்வினும் கோலியும் காட்டினர். இங்கிலாந்து வீரர்கள் ஆடிய அதே ஆடுகளத்தில் தான் இந்திய வீரர்களும் ஆடினர். எனவே பிரச்னை பிட்ச்சில் அல்ல; அதை பேட்ஸ்மேன்கள் அணுகும் விதத்தில் தான்.

அஷ்வினும் கோலியும் சிறப்பாக ஆடியபோதிலும், இங்கிலாந்து வீரர்கள் 2வது இன்னிங்ஸிலும் சொதப்பி 164 ரன்களுக்கு சுருண்டு 317 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சேப்பாக்கம் ஆடுகளத்தை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்த நிலையில், ஆடுகளம் குறித்து போட்டிக்கு பின் பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஆடுகளம் சவாலானதுதான். டாஸ் முக்கிய பங்கு வகித்தது. ஆனாலும் டாஸ் வென்றதால் மட்டுமே ஒரு அணி ஜெயித்துவிடமுடியாது. இந்திய வீரர்கள் அந்த சவாலான ஆடுகளத்திலும் எப்படி ஆட வேண்டும் என்று காட்டினர். மிகச்சவாலான ஆடுகளத்தில் சிறப்பாக ஆடினர் என்று ஆடுகளத்தின் தன்மை எப்படியிருந்தாலும் அதை சமாளித்து இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடியபோது, தாங்கள் அதை செய்ய தவறியதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டார் ஜோ ரூட்.
 

click me!