#ENGvsIND டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்திய தொடக்க வீரர்கள்

By karthikeyan VFirst Published Aug 17, 2021, 2:52 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டக் அவுட்டாகியுள்ளனர்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்தது.  இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மா(83) மற்றும் ராகுல்(129) ஆகியோரின் அபாரமான பேட்டிங் மற்றும் கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோரின் பங்களிப்பால், முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அபாரமான சதத்தால்(180*) 391 ரன்களை குவித்தது. 

27 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, ரஹானே(61) மற்றும் புஜாரா ஆகிய சீனியர் வீரர்களின் பொறுப்பான பேட்டிங் மற்றும் ஷமி(56) - பும்ரா(34) ஜோடியின் அபாரமான பேட்டிங்கால் 298 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 272 ரன்கள் என்ற இலக்கை கடைசி நாள் ஆட்டத்தின் 2வது செசனில் விரட்ட தொடங்கிய இங்கிலாந்து அணி, வெறும் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 151 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவரும் முறையே பும்ரா மற்றும் ஷமி வீசிய முதல் 2 ஓவர்களில் டக் அவுட்டாகி வெளியேறினர். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு மோசமான சாதனையை பெற்று கொடுத்துள்ளனர். இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் ஒரு இன்னிங்ஸில் டக் அவுட்டாவது இதுவே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகும். இதற்கு முன், எந்த இங்கிலாந்து தொடக்க ஜோடியும் ஒரு இன்னிங்ஸில் டக் அவுட்டானதில்லை.
 

click me!