இந்தியா - நியூசிலாந்து மேட்ச் ஃபுல்லா பார்த்தேன்.. இந்தியா தோற்றதற்கு அவங்கதான் காரணம்.. இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் அதிரடி

By karthikeyan VFirst Published Jul 13, 2019, 4:29 PM IST
Highlights

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுமே லீக் சுற்றில் வெற்றி தோல்விகளை சந்தித்து ஏற்ற இறக்கங்களுடன் தான் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரு அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த முறை உலக கோப்பையை இதுவரை தூக்காத அணி தூக்குவது உறுதியாகிவிட்டது. 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. நாளையுடன் உலக கோப்பை தொடர் முடிவடைகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை நடக்கும் இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

அதற்காக இரு அணிகளும் கடும் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்திய அணியை போராடி வீழ்த்திய நியூசிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியை அசால்ட்டா வீழ்த்திய இங்கிலாந்து அணியும் இறுதி போட்டியில் மோதுகின்றன. 

இரு அணிகளுமே லீக் சுற்றில் வெற்றி தோல்விகளை சந்தித்து ஏற்ற இறக்கங்களுடன் தான் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் சிறப்பாக ஆடி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளன. இரு அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த முறை உலக கோப்பையை இதுவரை தூக்காத அணி தூக்குவது உறுதியாகிவிட்டது. 

இந்நிலையில், தாங்கள் இறுதி போட்டியில் எதிர்கொள்ளவுள்ள நியூசிலாந்து அணி குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், இந்தியா - நியூசிலாந்து இடையேயான அரையிறுதி ஆட்டத்தை பயிற்சிக்கு செல்லும் முன் முழுவதுமாக பார்த்தேன். கிரிக்கெட்டின் மிகச்சிறந்த போட்டி அது. நியூசிலாந்து பவுலர்கள் அபாரமாக பந்துவீசினார்கள். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி அபாரமாக வீசினார்கள். இந்திய அணியின் தோல்விக்கு நியூசிலாந்து பவுலர்கள் தான் காரணம். நியூசிலாந்து அணி உலக கோப்பை தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட்டை ஆடி, வீழ்த்துவதற்கு கடினமான அணியாகவே வலம்வந்துள்ளது. இறுதி போட்டி கடும் சவாலானதாக இருக்கும். அந்த சவாலை எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம் என்று இயன் மோர்கன் தெரிவித்துள்ளார். 
 

click me!