இலங்கைக்கு எதிரான இரணடாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இங்கிலாந்து அணி அசத்தி உள்ளது.
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 251 ரன்களும் சேர்த்தது.
சச்சினின் சானைக்காக நான் விளையாடவில்லை; என் பயணம் ரொம்ப பெருசு - ஜோ ரூட் வெளிப்படை
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆட்டம் இழந்து தடுமாறியது. பின்னர் இரண்டாவது இன்னிங்சில் 483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடியது. ஆனால் அந்த அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுபியது.
வேலை தேடி சென்னை வரும் பெண்களே உஷார்; தலைநகரில் விபசார கும்பல் அதிரடி கைது
இரு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசி ஜோ ரூட் இங்கிலாந்து வெற்றிக்கு உருதுணையாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி உள்ளது. மேலும் இரு அணிகள் இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகின்ற 6ம் தேதி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.