இந்திய அணியில் அவங்க 2 பேரும்தான் எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர்கள்.. மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்

By karthikeyan VFirst Published May 24, 2019, 4:45 PM IST
Highlights

தோனி ஆடவில்லை என்றால்தான் மாற்று விக்கெட் கீப்பர் ஆடுவார் என்பதால் முக்கியமான போட்டியில் மாற்று விக்கெட் கீப்பர் களமிறங்க நேரிட்டால் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுவது அவசியம். அந்த வகையில், அனுபவ மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற முறையிலும் பெஸ்ட் ஃபினிஷர் என்ற வகையிலும் தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டார்.

உலக கோப்பைக்கான இந்திய அணியில் மாற்று விக்கெட் கீப்பராக யார் எடுக்கப்படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்த, ஒருவழியாக சீனியர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டார். 

ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்ட்டிற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டதாலும் அவர் பேட்டிங்கில் அபாரமாக ஆடியதாலும் அவர்தான் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டார்.

தோனி ஆடவில்லை என்றால்தான் மாற்று விக்கெட் கீப்பர் ஆடுவார் என்பதால் முக்கியமான போட்டியில் மாற்று விக்கெட் கீப்பர் களமிறங்க நேரிட்டால் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுவது அவசியம். அந்த வகையில், அனுபவ மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற முறையிலும் பெஸ்ட் ஃபினிஷர் என்ற வகையிலும் தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் விளக்கமளித்தார். 

2007ல் டிராவிட் தலைமையில் உலக கோப்பையில் ஆடிய இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இருந்தார். இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக். தோனி அணிக்கு வந்த காலத்திலிருந்தே தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணியில் ஆடுகிறார். ஆனால் தோனி நிரந்தர விக்கெட் கீப்பராக இடம்பிடித்துவிட்டதால் அவ்வப்போது தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்படுவார். 

தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் இந்திய அணியில் 15 ஆண்டுகளாக ஆடுகிறார். தற்போதைய உலக கோப்பை அணியில் இருக்கும் வீரர்களில் பெரும்பாலானோர் அவரைவிட ரொம்ப ஜூனியர்கள்தான். இந்நிலையில், உலக கோப்பை அணியில் தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்றால் அது கேஎல் ராகுலும் ஹர்திக் பாண்டியாவும்தான் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அவர்கள் 2 பேர் மட்டும் அணியில் இல்லாமல் இருந்திருந்தால் தனக்கு கம்பெனிக்கு சரியான ஆள் இல்லாமல் போயிருக்கும் எனவும் அவர்கள் தான் தனக்கு ரொம்ப நெருக்கமானவர்கள் என்றும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 
 

click me!