Dhruv Jurel, Sarfaraz Khan: சி கிரேடில் இணைந்த சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரெல் – ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளம்!

By Rsiva kumarFirst Published Mar 19, 2024, 3:42 PM IST
Highlights

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெலுக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளித்துள்ளது.

இந்தியா வந்த இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், இந்திய அணியில் விராட் கோலி இந்த சீரிஸில் இடம் பெறவில்லை. அனுபவ வீரரான கேஎல் ராகுல் முதல் போட்டியில் மட்டுமே இடம் பெற்று விளையாடினார். இதில், 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய சர்ஃபராஸ் கான் 3 சதங்கள் அடித்துள்ளார்.

இதே போன்று தான் கேஎல் ராகுல் இல்லாத நிலையில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக அணியில் இடம் பெற்ற துருவ் ஜூரெல் இங்கிலாந்துகு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 4ஆவது டெஸ்ட் போட்டியில் 90 ரன்கள் மற்றும்46 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெலுக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு வீரர் ஒரு வருடத்தில் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் போட்டி அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடியிருந்தால் அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் வழங்கப்படும்.

அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின் மூலமாக இந்திய அணியில் அறிமுகமான சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரெல் இருவருக்கும் பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்க முடிவு செய்யப்பட்டு இருவருக்கும் கிரேடு சி ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இருவருக்கும் ரூ.1 கோடி வரையில் சம்பளம் வழங்கப்படும். மேலும், அடுத்தடுத்து நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் அணித் தேர்வில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

click me!