ஓரமா உட்கார வைக்கப்பட்ட சீனியர் வீரர்.. இளம் வீரருக்கு கடைசி சான்ஸ் இதுதான்!!

By karthikeyan VFirst Published Mar 9, 2019, 11:13 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், நாளை மொஹாலியில் நான்காவது ஒருநாள் போட்டியும் 13ம் தேதி டெல்லியில் கடைசி ஒருநாள் போட்டியும் நடக்க உள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால் உலக கோப்பை அணியில் பரிசீலனையில் இருக்கும் சில வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட உள்ளது. 

முதல் மூன்று போட்டிகளில் அப்படியான வாய்ப்பு எதுவும் யாருக்கும் அளிக்கப்படவில்லை. மூன்று போட்டிகளிலும் ஒரே அணி தான் ஆடியது. அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. 

இந்நிலையில், நாளை மொஹாலியில் நான்காவது ஒருநாள் போட்டியும் 13ம் தேதி டெல்லியில் கடைசி ஒருநாள் போட்டியும் நடக்க உள்ளது. ரிஷப் பண்ட், ராகுல் ஆகிய வீரர்களுக்கு இந்த தொடரில் இன்னும் வாய்ப்பே அளிக்கப்படவில்லை. அந்த வகையில் கடைசி 2 போட்டிகளில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதை கேப்டன் கோலியே, மூன்றாவது போட்டிக்கு பிறகு உறுதி செய்தார். 

உலக கோப்பை அணியில் ரிசர்வ் விக்கெட் கீப்பராக யார் இடம்பெறப்போகிறார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலிய தொடரில் அணியில் எடுக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டிருந்தாலும் ரிஷப் பண்ட்டை எடுப்பதும் இன்னும் உறுதியாகவில்லை. 

அந்த வகையில் ரிஷப் பண்ட்டுக்கு கடைசி 2 போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. இதுதான் ரிஷப் பண்ட்டுக்கு உலக கோப்பையில் அணியில் தனது இடத்தை உறுதி செய்ய கடைசி வாய்ப்பு. இந்த போட்டிகளிலும் சொதப்பினால் ரிஷப் பண்ட் உலக கோப்பைக்கு அழைத்து செல்லப்படுவது கடினம்.

கடைசி 2 போட்டிகளில் தோனிக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதாக பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். எனவே தோனி கடைசி 2 போட்டிகளில் ஆடாதது உறுதியாகிவிட்டதால் ரிஷப் பண்ட் ஆட உள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக ஆடினால் உலக கோப்பை அணியில் இடம்பெறலாம். இல்லையெனில் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் தான் உலக கோப்பைக்கு அழைத்து செல்லப்படுவார். 
 

click me!