மனைவியுடன் ஏர்போர்ட்டில் தரையில் படுத்து தூங்கிய தோனி!! வியக்கவைக்கும் தோனியின் எளிமை.. நெகிழ்ந்து பாராட்டும் ரசிகர்கள்

Published : Apr 10, 2019, 11:03 AM ISTUpdated : Apr 10, 2019, 11:07 AM IST
மனைவியுடன் ஏர்போர்ட்டில் தரையில் படுத்து தூங்கிய தோனி!! வியக்கவைக்கும் தோனியின் எளிமை.. நெகிழ்ந்து பாராட்டும் ரசிகர்கள்

சுருக்கம்

சென்னை சேப்பாக்கத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.   

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. 

சென்னை சேப்பாக்கத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

இந்த போட்டி நாளை ஜெய்ப்பூரில் நடக்கிறது. சிஎஸ்கே அதற்காக இன்று விடியற்காலை விமானத்தில் ஜெய்ப்பூருக்கு சென்றது. நேற்று இரவு போட்டி முடிந்ததும், இன்று விடியற்காலையிம் சிஎஸ்கே அணிக்கு ஜெய்ப்பூர் செல்வதற்கான விமானம். அதனால் போட்டி முடிந்ததும் நேரடியாக சென்னை விமான நிலையத்திற்கு சென்றது சிஎஸ்கே அணி. 

அப்போது விமானத்திற்காக காத்திருந்த நேரத்தில் தோனியும் அவரது மனைவி சாக்‌ஷி தோனியும் ஏர்போர்ட்டில் தரையிலேயே படுத்து உறங்கினர். தான் ஒரு மிகப்பெரிய மனிதர் என்ற ஆணவமெல்லாம் இல்லாமல் மிகவும் எளிமையாக தனது மனைவியுடன் தரையில் படுத்து உறங்கினார் தோனி. அவ்வப்போது ஏதாவது ஒரு சம்பவத்தின் மூலம் பேசுபொருளாக மாறும் தோனி, இப்போது தனது எளிமையால் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறார். அவரது எளிமையை ரசிகர்கள் வியந்து பாராட்டிவருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!