இவ்வளவு பெரிய தவறை செய்து இந்திய அணியை ஆபத்தில் சிக்கவைத்தது தோனியா..? வெளிவந்தது அதிர்ச்சி தகவல்

Published : Oct 29, 2021, 10:09 PM IST
இவ்வளவு பெரிய தவறை செய்து இந்திய அணியை ஆபத்தில் சிக்கவைத்தது தோனியா..? வெளிவந்தது அதிர்ச்சி தகவல்

சுருக்கம்

முழு ஃபிட்னெஸுடன் இல்லாத ஹர்திக் பாண்டியாவை, டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்க சொன்னது, அணியின் ஆலோசகர் தோனி தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கபில் தேவுக்கு நிகராக பேசப்பட்டவர்/மதிப்பிடப்பட்டவர். அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்திலும் வல்லவராக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் இடம்பிடித்த குறுகிய காலத்திலேயே அணியில் தனக்கென்று நிரந்தர இடத்தை பிடித்து, அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்தவர்.

இந்திய அணியின் முக்கியமான வீரராக ஜொலித்துக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு வினையாக அமைந்தது 2018 ஆசிய கோப்பை  தொடர். அந்த தொடரில் முதுகுப்பகுதியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஆடவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வரவே அதிக காலம் எடுத்துக்கொண்ட பாண்டியா, அதன்பின்னரும் அடுத்தடுத்து சில காயங்களால் முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் போனார்.

முழு ஃபிட்னெஸுடன் இல்லாததாலேயே அவரால் பவுலிங்கும் வீசமுடியாமல் போயிற்று. கடைசியாக இலங்கை சுற்றுப்பயணத்தில் பந்துவீசினார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவர் கூட வீசவில்லை.

டி20 உலக கோப்பையில் அவர் பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில்  பாகிஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் தோள்பட்டையில் காயமடைந்த பாண்டியா, 2வது இன்னிங்ஸில் களத்திற்கே வரவில்லை.

அவர் பந்துவீசாதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் 6வது பவுலிங் ஆப்சன். ஆனால் அவர் பந்துவீசாததால் இந்திய அணி சரியாக 5 பவுலர்களுடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் ஆடுவதால், 6வது பவுலிங் ஆப்சன் கிடையாது. இது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துவிடுகிறது. ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால் அவர் பந்துவீசியாக வேண்டும். அப்படி வீசவில்லை என்றால் அவர் ஆடும் லெவனில் இடம்பெறுவது அவசியமற்றது. வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் ஹர்திக் பாண்டியாவை ஆடவைப்பது அணி காம்பினேஷனை பாதிக்கும். அந்த பாதிப்பைத்தான் பாகிஸ்தானுக்கு எதிராக அனுபவித்தது இந்தியா.

எனவே ஹர்திக் பாண்டியா பந்துவீசாத பட்சத்தில் அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக, அணியின் காம்பினேஷனுக்கு வலுசேர்க்கும் வகையில் வேறு வீரரை ஆடவைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்தன. முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் உள்ளிட்ட பலர் வலியுறுத்திவருகின்றனர். அவர் பந்துவீசவில்லை என்றால் அணியில் அவரை எடுக்கக்கூடாது என்று பலர் வலியுறுத்திவரும் நிலையில், முழு ஃபிட்னெஸுடன் இல்லாத பாண்டியாவை டி20 உலக கோப்பைக்கான அணியில் தேர்வு செய்தது எப்படி? என்று சந்தீப் பாட்டீல் கேள்வியெழுப்பினார்.

ஐபிஎல்லில் ஒரு ஓவர் கூட வீசாத ஹர்திக் பாண்டியாவை, அவரது ஃபிட்னெஸை நிரூபிக்க சொல்லிவிட்டு, ஃபிட்னெஸை நிரூபித்தால் அல்லவா  அவரை எடுத்திருக்க வேண்டும்? ஃபிட்னெஸ் இல்லாத பாண்டியாவை டி20 உலக கோப்பை போன்ற பெரிய தொடருக்கான அணியில் எடுத்ததற்கு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று சந்தீப் பாட்டீல் கடுமையாக விளாசியிருந்தார்.

இந்நிலையில், பாண்டியாவை அணியில் எடுக்க சொன்னது இந்திய அணியின் ஆலோசகர் தோனி தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்லில் ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட பந்துவீசவில்லை என்றதுமே, டி20 உலக கோப்பைக்கு அவர் தேவையில்லை என்று முடிவு செய்து, அவரை அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு அனுப்ப தேர்வாளர்கள் முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் ஒரு ஃபினிஷராக அவர் தேவை என்று தோனி தான் அவரை அணியில் எடுக்க சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பாண்டியாவின் காயமும் ஃபிட்னெஸும் மர்மமாகவே உள்ளது. கடந்த 6 மாதங்களாகவே பெரிய மர்மமாகவே இருந்துள்ளது. ஃபிட் இல்லாத பாண்டியாவை அணியில் எடுத்ததன் மூலம், ஃபிட்டான ஒரு வீரர் அணியில் இடத்தை இழக்கிறார். அவருக்கு பதில் ஃபிட்டான ஒருவரை எடுத்திருந்தால், அணிக்கு பயனாகவாவது இருந்திருக்கும்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீரர்களுக்காக கண்கொத்தி பாம்பாய் காத்திருக்கும் அணிகள்.. அபுதாபியில் இன்று IPL மினி ஏலம்
IND vs SA T20: ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!