ஏன்ப்பா குல்தீப்பு.. நீ போடுறது வாத்தி கம்மிங் ஸ்டெப்பா..? செம காமெடி போ.. வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Feb 20, 2021, 2:22 PM IST
Highlights

அஷ்வினுடன் இணைந்து மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு தவான் மற்றும் குல்தீப் யாதவ் போட்ட ஆட்டம் டுவிட்டரில் செம வைரலாகிவருகிறது.
 

விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படம் சூப்பர் ஹிட்டடித்தது. மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் செம ஹிட் மட்டுமல்லாது செம வைரலும் கூட. கிரிக்கெட் வீரர்களையும் கவர தவறவில்லை வாத்தி கம்மிங்.

அண்மையில் உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டிராபியை வென்ற தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி வீரர்கள், வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடினர். 

இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த 2வது டெஸ்ட்டில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த அஷ்வின், தோள்பட்டையை ஆட்டி வாத்தி கம்மிங் பாடலின் ஸ்டெப்பை போட்டார். அந்த வீடியோ செம வைரலானது. ரஹானேவை மாஸ்டர் படம் பார்க்க பரிந்துரைத்தார் அஷ்வின். அஷ்வினிடம் ஹர்திக் பாண்டியாவும் மாஸ்டர் படம் குறித்து விசாரிக்க, அவரிடமும் வாத்தி கம்மிங் பாடலை போட்டுக்காட்டி விளக்கினார் அஷ்வின். இதையடுத்து மாஸ்டர் படம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் மிக பிரபலமானது.

இந்நிலையில், அஷ்வினுடன் இணைந்து தவானும் குல்தீப்பும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர். அஷ்வினை பின்பற்றி அந்த ஸ்டெப்பை தவான் ஓரளவிற்கு சரியாக போட்டுவிட, குல்தீப் யாதவ் ஆடியது செம காமெடியாக இருந்தது. அதை வாத்தி கம்மிங் பாடல் ஸ்டெப் என்று நம்ப முடியாது. எனினும் அவரது முயற்சி பாராட்டுக்குரியது. அந்த வீடியோவை கேகேஆர் அணி டுவிட்டரில் பதிவு செய்ய, அது செம வைரலாகிவருகிறது.
 

is back, this time with , and 🕺🎶 pic.twitter.com/RoeYCKC7tz

— KolkataKnightRiders (@KKRiders)
click me!