கேப்டன் ஆனார் ஷுப்மன் கில்.. சீனியர் வீரர்களை கொண்ட அணிக்கு இளம் கேப்டன்

By karthikeyan VFirst Published Oct 25, 2019, 10:35 AM IST
Highlights

தியோதர் டிராபி தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தினேஷ் கார்த்திக், மயன்க் அகர்வால் ஆகிய சீனியர் வீரர்களை கொண்ட அணிக்கு இளம் வீரர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தியோதர் டிராபி தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா ஏ,பி,சி என மூன்று அணிகளாக பிரித்து தியோதர் டிராபி தொடர் நடத்தப்படும். 

நடப்பாண்டுக்கான தியோதர் டிராபி தொடர் வரும் 31ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதிவரை நடக்கிறது. இந்தியா ஏ அணிக்கு ஹனுமா விஹாரியும் இந்தியா பி அணிக்கு பார்த்திவ் படேலும் இந்தியா சி அணிக்கு ஷுப்மன் கில்லும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹனுமா விஹாரி தலைமையிலான இந்தியா ஏ அணியில் அனுபவ வீரரான அஷ்வின் உள்ளார். மேலும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடிவரும் இளம் வீரர்களான அபிமன்யூ ஈஸ்வரன், விஷ்னு வினோத், தேவ்தத் படிக்கல், இஷான் கிஷான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணியில் கேதர் ஜாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பாபா அபரஜித் பிரியங்க் பன்சால், விஜய் சங்கர், சிராஜ், நிதிஷ் ராணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பாபா அபரஜித் ஆகிய இருவரும் விஜய் ஹசாரேவில் அபாரமாக ஆடினார்கள்.

தினேஷ் கார்த்திக், மயன்க் அகர்வால், சூர்யகுமார் யாதவ் ஆகிய சீனியர் வீரர்களை கொண்ட இந்தியா சி அணிக்கு இளம் வீரர் ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் அக்ஸர் படேல், மயன்க் மார்கண்டே ஆகிய ஸ்பின்னர்கள் உள்ளனர்.

இந்தியா ஏ அணி:

ஹனுமா விஹாரி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், அபிமன்யூ ஈஸ்வரன், விஷ்ணு வினோத், அமந்தீப் கரே, அபிஷேக் ராமன், இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அஹமது, ரவி பிஷ்னோய், அஷ்வின், ஜெய்தேவ் உனாத்கத், சந்தீப் வாரியர், சித்தார்த் கவுல், பார்கவ் மேராய்.
 
இந்தியா பி அணி:

பார்த்திவ் படேல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பிரியங்க் பன்சால், யஷஸ்வி ஜெய்ஸ்வால், பாபா அபரஜித், கேதர் ஜாத்வ், ருதுராஜ் கெய்க்வாட், ஷாபாஸ் நதீம், அனுகுல் ராய், கிருஷ்ணப்பா கௌதம், விஜய் சங்கர், சிராஜ், ருஷ் கலாரியா, ப்ரித்விராஜ், நிதிஷ் ராணா.

இந்தியா சி அணி:

ஷுப்மன் கில்(கேப்டன்), மயன்க் அகர்வால், அன்மோல்ப்ரீத் சிங், சூர்யகுமார் யாதவ், பிரியம் கார்க், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், மயன்க் மார்கண்டே, ஜலஜ் சக்ஸேனா, அவேஷ் கான், தவால் குல்கர்னி, இஷான் போரெல், டிஜி பதானியா, விராட் சிங்.
 

click me!