டேவிட் வார்னரை கழற்றிவிட்ட டெல்லி கேபிடல்ஸ் – டாஸ் வென்று பவுலிங்!

By Rsiva kumarFirst Published Apr 17, 2024, 7:27 PM IST
Highlights

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 32ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 32ஆவது லீக் போட்டி நடக்கிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் டேவிட் வார்னர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக சுமித் குமார் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆனால், குஜராத் டைட்டன்ஸ் அணியில் விருத்திமான் சகா, டேவிட் மில்லர் திரும்ப வந்துள்ளனர். சந்தீப் வாரியர் இன்றைய போட்டியில் அறிமுகம் செய்யப்பட உள்ளார். மேலும், உமேஷ் யாதவ்விற்கு பதிலாக அவர் இடம் பெறுகிறார்.

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், மோகித் சர்மா, நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்.

டெல்லி கேபிடல்ஸ்:

பிரித்வி ஷா, ஜாக் பிரேசர் மெக்கர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது.

இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் 2ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் 9ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 3ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.

இதுவரையில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மோதிய 3 போட்டிகளில் குஜராத் 2 போட்டிகளிலும், டெல்லி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் கடைசியாக நடந்த 3 போட்டிகளிலும் அவே அணியே வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெறுவதற்கு 50 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது.

click me!