IPL 2021 #MIvsDC இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம்.! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Oct 2, 2021, 3:44 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனில் சிஎஸ்கேவும் டெல்லி கேபிடள்ஸும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டன. ஆர்சிபியும் கிட்டத்தட்ட முன்னேறும் நிலையில் உள்ளது. 4வது அணியாக பிளே ஆஃபிற்குள் நுழைய மும்பை இந்தியன்ஸ், கேகேஆர், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான்  ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

எனவே பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி இன்று டெல்லியை எதிர்கொள்கிறது. ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மும்பை அணியில் ராகுல் சாஹர் நீக்கப்பட்டு, ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா, ஜெயந்த் யாதவ், நேதன் குல்ட்டர்நைல், டிரெண்ட் போல்ட், பும்ரா.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் லலித் யாதவ் நீக்கப்பட்டு பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்டீவ் ஸ்மித், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான்.
 

click me!