#DCvsPBKS ஸ்மித்துக்கு சான்ஸ்; டெல்லி அணியில் 2 மாற்றங்கள்..! பஞ்சாப் அணியில் ஒரேயொரு மாற்றம்

By karthikeyan VFirst Published Apr 18, 2021, 7:27 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடேவில் நடக்கிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், பஞ்சாப் கிங்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

இந்த சீசனில் இரு அணிகளும் அவற்றின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் தோற்றன. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. முருகன் அஷ்வினுக்கு பதிலாக ஜலஜ் சக்ஸேனா சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், ஷாருக்கான், ஜெய் ரிச்சர்ட்ஸன், கிறிஸ் ஜோர்டான், முருகன் அஷ்வின், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரஹானே சரியாக ஆடாததையடுத்து, டாப் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக ரஹானே நீக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார். வெளிநாட்டு வீரரான ஸ்மித் சேர்க்கப்பட்டதால் டாம் கரன் நீக்கப்பட்டார். லுக்மன் மெரிவாலா என்ற உள்நாட்டு ஃபாஸ்ட் பவுலர் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், கிறிஸ் வோக்ஸ், அஷ்வின், ரபாடா, ஆவேஷ் கான், லுக்மன் மெரிவாலா.
 

click me!