#IPL2021 கிறிஸ் வோக்ஸுக்கு மாற்றாக ஆஸி., ஃபாஸ்ட் பவுலரை ஒப்பந்தம் செய்தது டெல்லி கேபிடள்ஸ் அணி

By karthikeyan VFirst Published Sep 13, 2021, 2:53 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய கிறிஸ் வோக்ஸுக்கு பதிலாக ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் பென் டிவாரஷிஸை ஒப்பந்தம் செய்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி.
 

ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் மீண்டும் தொடங்கி நடக்கவுள்ளன. அதற்காக அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

ஐபிஎல் 14வது சீசனை தொடர்ந்து டி20 உலக கோப்பை நடக்கவுள்ளதால், அதற்கு தயாராகும் விதமாக, ஃபிட்னெஸை கருத்தில்கொண்டு சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகினர். சில வீரர்கள் காயம் காரணமாக விலகினர். அப்படியாக விலகிய வீரர்களுக்கான மாற்று வீரர்களை அணிகள் அறிவித்துவருகின்றன.

இங்கிலாந்து வீரர்களான ஆர்ச்சர் காயத்தால் விலகிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையற்ற ஓய்வு எடுத்து சென்றுள்ளார். பட்லரும் ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகினார்.

இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ(சன்ரைசர்ஸ் ஹைதராபாத்), கிறிஸ் வோக்ஸ்(டெல்லி கேபிடள்ஸ்) மற்றும் டேவிட் மலான்(பஞ்சாப் கிங்ஸ்) ஆகிய 3 வீரர்களும் ஐபிஎல்லில் இருந்து விலகினர்.

டேவிட் மலானுக்கு மாற்று வீரராக தென்னாப்பிரிக்கா டாப் ஆர்டர் பேட்ஸ்மேனை ஒப்பந்தம் செய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்று வீரராக வெஸ்ட் இண்டீஸின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டை ஒப்பந்தம் செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 

இந்நிலையில், ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகிய ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸுக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் பென் டிவாரஷிஸை ஒப்பந்தம் செய்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி.

27 வயதான பென் டிவாரஷிஸ், பிக்பேஷ் லீல் 2020-2021 சீசனில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக ஆடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். அந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களில் 2ம் இடத்தை பிடித்தார் டிவாரஷிஸ். 82 டி20 போட்டிகளில் ஆடி 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 

click me!