முதல் வெற்றிக்காக போராடும் குஜராத் ஜெயிண்ட்ஸ் – 163 ரன்கள் எடுத்த டெல்லி கேபிடல்ஸ்!

By Rsiva kumar  |  First Published Mar 3, 2024, 9:25 PM IST

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 10ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்துள்ளது.


டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 10ஆவது லீக் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், கேப்டன் மெக் லேனிங் மற்றும் ஷஃபாலி வர்மா  இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.

இதில், ஷஃபாலி வர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். அடுத்து வந்த அலீஸ் கேப்ஸி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மெக் லேனிங் 41 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 55 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 7 ரன்னிலும், அன்னபெல் சுதர்லேண்ட் 20 ரன்னிலும், ஜெஸ் ஜோனாசன் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக ஷிகா பாண்டே 14 ரன்கள் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது.

Tap to resize

Latest Videos

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் மேக்னா சிங் 4 விக்கெட்டும், ஆஷ்லெக் கார்ட்னர் 2 விக்கெட்டும், மன்னட் காஷ்யப் மற்றும் தனுஜா கன்வர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 164 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. இதுவரையில் குஜராத் ஜெயிண்ட்ஸ் விளையாடிய 3 போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது.

click me!