ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்திய ஷமி; தவான் ரன் அவுட்..! டெல்லி கேபிடள்ஸின் பவர்பிளே பரிதாபம்

By karthikeyan VFirst Published Sep 20, 2020, 8:11 PM IST
Highlights

கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் படுமோசமாக தொடங்கியது.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸும் கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன. 

துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல், டெல்லி கேபிடள்ஸை முதலில் பேட்டின் செய்ய பணித்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, மோஹித் சர்மா.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன்), மயன்க் அகர்வால், கருண் நாயர், சர்ஃபராஸ் கான், க்ளென் மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரான், கிருஷ்ணப்பா கௌதம், கிறிஸ் ஜோர்டான், ஷெல்டான் கோட்ரெல், ரவி பிஷ்னோய், முகமது ஷமி. 

இதையடுத்து டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவானும் பிரித்வி ஷாவும் களத்திற்கு வந்தனர். கோட்ரெல் வீசிய முதல் ஓவரில் பிரித்வி ஷா ஒரு பவுண்டரியும் ஒரு சிங்கிளும் அடித்தார். அந்த ஓவரில் ஐந்து ரன்கள் அடிக்கப்பட்டன.

ஷமி வீசிய 2வது ஓவரின் 4வது பந்தை பவுன்ஸராக வீசிய பந்தில் தவான், விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அந்த கேட்ச்சை தவறவிட்ட கேஎல் ராகுல், பந்தை திரும்ப எடுக்கச்செல்லும் கேப்பில் ரன் ஓட முயன்ற தவானுக்கு பிரித்வி ஷாவும் ஆரம்பத்தில் ஒத்துழைப்பு கொடுத்து, பின்னர் வேண்டாம் என்றார். ஆனால் ஷா வேண்டாம் என்று சொன்னதை கவனிக்காமல், தொடர்ந்து ஓடிய தவானை கேஎல் ராகுல் ரன் அவுட் செய்தார். ராகுல் பந்தை பிடித்து வீச, அதை கிருஷ்ணப்பா கௌதம் பிடித்து ரன் அவுட் செய்தார்.

தவான் டக் அவுட்டாக, அதன்பின்னர் ஷிம்ரான் ஹெட்மயர், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். அவர்கள் இருவரையுமே ஷமி தனது அடுத்த ஓவரில் வீழ்த்தினார். 4வது ஓவரை வீசிய ஷமி, அந்த ஓவரின் 3வது பந்தில் பிரித்வி ஷாவையும் கடைசி பந்தில் ஹெட்மரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்ற, 4 ஓவரில் 13 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது டெல்லி கேபிடள்ஸ். 

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். பவர்ப்ளேயில்(முதல் ஆறு ஒவர்கள்) வெறும் 23 ரன்கள் அடித்து 3 விக்கெட்டுகளையும் இழந்தது டெல்லி கேபிடள்ஸ். இக்கட்டான நிலையில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸை ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து தான் காப்பாற்ற வேண்டும்.  
 

click me!