எந்தெந்த வீரர்களை எடுக்கப்போறோம்.. ஏலத்திற்கு முன்பே சூட்சமத்தை வெளியிட்ட ரிக்கி பாண்டிங்

Published : Dec 19, 2019, 01:55 PM ISTUpdated : Dec 19, 2019, 01:58 PM IST
எந்தெந்த வீரர்களை எடுக்கப்போறோம்.. ஏலத்திற்கு முன்பே சூட்சமத்தை வெளியிட்ட ரிக்கி பாண்டிங்

சுருக்கம்

ஐபிஎல் 2020க்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே டெல்லி கேபிடள்ஸ் அணியின் திட்டத்தை வெளிப்படையாக தெரிவித்துவிட்டார், தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

ஐபிஎல் 13வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று(19ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. 

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி கேபிடள்ஸ் அணி, ரிக்கி பாண்டிங்கை தலைமை பயிற்சியாளராக பெற்ற பிறகு, அபாரமாக ஆடிவருகிறது. கடந்த சீசனில் சிறப்பாக ஆடி நீண்ட இடைவெளிக்கு பிறகு பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றது. பிளே ஆஃபில் சிஎஸ்கேவிடம் தோற்று வெளியேறியது. 

ஐபிஎல் 2020க்கான ஏலம் கொல்கத்தாவில் பிற்பகல் மூன்றரை மணிக்கு தொடங்குகிறது. மொத்தமாக 338 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணி எதில் கவனம் செலுத்தும் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். 

இதுகுறித்து டுவீட் செய்துள்ள ரிக்கி பாண்டிங், ஐபிஎல் ஏலத்தை நினைத்தால் உண்மையாகவே மிகுந்த உற்சாகமாக இருக்கிறது. எங்கள் அணியில்(டெல்லி கேபிடள்ஸ்) திறமையான இந்திய வீரர்கள் உள்ளனர். 2 பேட்ஸ்மேன்கள், ஒரு தரமான ஆல்ரவுண்டர் மற்றும் 2 ஃபாஸ்ட் பவுலர்கள் ஆகியோரை எடுக்கவுள்ளோம் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?