தம்பி உஷார்.. மறுபடியும் நகர்ந்தா அவுட் பண்ணிடுவேன்! தென்னாப்பிரிக்க வீரரை மிரட்டிய தீபக் சாஹர்.. வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Oct 4, 2022, 9:58 PM IST
Highlights

3வது டி20 போட்டியில் பந்துவீசுவதற்கு முன்பாக க்ரீஸை விட்டு நகர்ந்த தென்னாப்பிரிக்க வீரர் டிரிஸ்டான் ஸ்டப்ஸை தீபக் சாஹர் எச்சரித்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

கிரிக்கெட்டில் பவுலிங் முனையில் நிற்கும் பேட்ஸ்மேன், பவுலர் பந்துவீசுவதற்கு முன்பாக க்ரீஸை விட்டு நகர்ந்தால் பவுலர் ரன் அவுட் செய்யலாம். அதற்கு மன்கட் ரன் அவுட் என்று பெயர். இந்த மன்கட் ரன் அவுட் விதிப்படி சரிதான் என்றாலும், தார்மீக ரீதியில் தவறு என்கிற வகையில் பவுலர்கள் பெரிதாக இந்தவிதத்தில் ரன் அவுட் செய்வதில்லை.

ஆனால் ஐபிஎல்லில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜோஸ் பட்லரை மன்கட் ரன் அவுட் செய்தபோதுதான் இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அது பெரும் விவாதப்பொருளாகவும் ஆனது. அதன்பின் சில வீரர்கள் மன்கட் ரன் அவுட் செய்தனர்.  ஒவ்வொரு முறை மன்கட் ரன் அவுட் செய்யப்படும்போதும் பெரும் விவாதமே நடக்கும்.

இதையும் படிங்க - ஜடேஜா, பும்ராவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்! டாஸோடு சேர்த்து பெரிய குண்டையும் தூக்கிப்போட்ட ரோஹித்

அதை தடுக்கும் வகையில், மன்கட் ரன் அவுட்டை முறையான ரன் அவுட் என்று விதியை மாற்றியது எம்.சி.சி. அதனால் விதிப்படி அந்த ரன் அவுட் செல்லும். எம்.சி.சி அந்த ரன் அவுட்டை அதிகாரப்பூர்வ ரன் அவுட் என்று அங்கீகரித்த பின்பும் கூட, அந்த ரன் அவுட் சர்ச்சையாகவே உள்ளது.

அண்மையில் மகளிர் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா மன்கட் ரன் அவுட் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் பெரிய விவாதமாகவும் மாறியது. ரன் அவுட் செய்யும் முன் அப்படி க்ரீஸை விட்டு நகரும் வீரர்/வீராங்கனையை எச்சரிக்கலாமே என்பதுதான் பலரது கருத்தாக இருந்தது.

அந்தவகையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3வது டி20 போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி ரைலீ ரூசோவின் அதிரடி சதம் (48 பந்தில் 100 ரன்கள்) மற்றும் குயிண்டன் டி காக்கின் அதிரடி அரைசதம் (43 பந்தில் 68 ரன்கள்) ஆகியவற்றால் 20 ஓவரில் 227 ரன்களை குவித்தது. ரைலீ ரூசோவும் டிரிஸ்டான் ஸ்டப்ஸும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த போதிலும், 16வது ஓவரின் முதல் பந்தில் ஸ்டப்ஸை மன்கட் ரன் அவுட் செய்யும் வாய்ப்பு இருந்தபோதிலும் தீபக் சாஹர் அதை செய்யவில்லை.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டின் டாப் 5 வீரர்கள்.. ஆடம் கில்கிறிஸ்ட்டின் அதிரடி தேர்வு..! நம்பர் 1 இடத்தில் இந்திய வீரர்

தீபக் சாஹர் அந்த பந்தை வீசுவதற்கு முன்பே டிரிஸ்டான் ஸ்டப்ஸ் க்ரீஸை விட்டு நகர்ந்தார். ஆனால் தீபக் சாஹர் அவரை ரன் அவுட் செய்யாமல் சிரித்துக்கொண்டே எச்சரித்துவிட்டு சென்றார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

# Deepak chahar😁 pic.twitter.com/4AtKkZsct0

— Varsha (@Varsha81572215)
click me!