ஐபிஎல்லின் ஆல்டைம் லெவன்.. இந்திய முன்னாள் வீரரின் தேர்வு

By karthikeyan VFirst Published May 7, 2020, 10:30 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா தேர்வு செய்த ஐபிஎல்லின் ஆல்டைம் பெஸ்ட் லெவனை பார்ப்போம்.
 

கொரோனா ஊரடங்கால் ஐபிஎல் உட்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 13வது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ, இந்திய வீரர்கல் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல்லை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா, ஐபிஎல்லின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். ஆல்டைம் ஐபிஎல் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரையும் தீப் தாஸ்குப்தா தேர்வு செய்துள்ளார்.

மூன்றாம் வரிசைக்கு சுரேஷ் ரெய்னாவையும் நான்காம் வரிசை வீரராக விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார். ஐபிஎல்லில் தொடக்க வீரராகவும் மிடில் ஆர்டரிலும் ஆடியுள்ள ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக எடுக்க முடியாததால் ஐந்தாம் வரிசையில் தேர்வு செய்துள்ளார். 

விக்கெட் கீப்பராக தோனியையும், ஆல்ரவுண்டர்களாக சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர்களான பிராவோ மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் தேர்வு செய்த தீப் தாஸ்குப்தா, ஃபாஸ்ட் பவுலர்களாக மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர பவுலர்கள் பும்ரா மற்றும் மலிங்கா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னராக ஆர்சிபியின் சாஹலை தேர்வு செய்துள்ளார். 12வது வீரராக கேகேஆரின் ஆல்ரவுண்டர் சுனில் நரைனை தேர்வு செய்திருக்கிறார். 

தீப் தாஸ்குப்தாவின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி(விக்கெட் கீப்பர்), பிராவோ, ஜடேஜா, பும்ரா, மலிங்கா, சாஹல்.

12வது வீரர்: சுனில் நரைன்
 

click me!