டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அந்த வீரர் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியம் இல்லை..! முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 9, 2021, 7:34 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் புறக்கணிக்கப்பட்டதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை என்று முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

ஸ்டாண்ட்பை வீரர்கள் - ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர்.

இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா, ராகுல் சாஹர், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகிய 5 ஸ்பின்னர்கள் எடுக்கப்பட்டபோதிலும், கோலியின் ஆஸ்தான ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் அணியில் எடுக்கப்படவில்லை. அஷ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.

ரிஸ்ட் ஸ்பின்னரான சாஹலை தலையில் தூக்கிவைத்து கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடினார் கேப்டன் கோலி. கோலியின் ஆஸ்தான ஸ்பின்னராகவும் திகழ்ந்த சாஹல், டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், அவரது புறக்கணிப்பில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்று முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள தீப்தாஸ் குப்தா, கடந்த 2 டி20 தொடர்களில் கூட சாஹல் ஓரங்கட்டப்பட்டு ராகுல் சாஹர் தான் அணியில் எடுக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரில் கூட ராகுல் சாஹருக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அவரும் அருமையாக பந்துவீசினார். எனவே அவரது தேர்வில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 

ராகுல் சாஹர் - யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரில் எப்போதுமே சாஹலை விட சாஹர் தான் சிறந்தவர். இந்திய அணியில் வெறும் 3 ஃபாஸ்ட் பவுலர்கள் மட்டுமே உள்ளனர். அணியின் மூன்றில் ஒரு பகுதியினர் ஸ்பின்னர்கள். இதிலிருந்தே அமீரகத்தில் பிட்ச் எப்படியிருக்கும் என்று ஊகிக்க முடிகிறது என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
 

click me!