#ENGvsIND இந்திய அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ்..! கடைசி டெஸ்ட் நடப்பது சந்தேகம்

Published : Sep 09, 2021, 05:12 PM IST
#ENGvsIND இந்திய அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ்..! கடைசி டெஸ்ட் நடப்பது சந்தேகம்

சுருக்கம்

இங்கிலாந்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால், நாளை தொடங்கவிருந்த கடைசி டெஸ்ட் போட்டி நடப்பது சந்தேகமாகியுள்ளது.  

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

5வது டெஸ்ட் நாளை(10ம் தேதி) மான்செஸ்டாரில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருக்கிறது.

4வது டெஸ்ட் போட்டி நடந்துகொண்டிருந்தபோது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகிய மூவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் மூவருடன் ஃபிசியோ நிதின் படேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நாளை கடைசி டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்திய  வீரர்கள் உட்பட அணி நிர்வாகத்தை சேர்ந்த யாருமே ஹோட்டல் அறைகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால், கடைசி டெஸ்ட் போட்டி நடப்பது சந்தேகமாகியுள்ளது.

லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் சில வீரர்கள் கலந்துகொண்டதுதான் கொரோனா பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதனால் அடுத்தடுத்து வீரர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!