டேவிட் வார்னர் முச்சதமடித்து சாதனை.. ஆஸி., ஓபனரின் வேற லெவல் பேட்டிங்.. 400ஐ நோக்கி வெறித்தனமா ஆடும் வார்னர்

Published : Nov 30, 2019, 12:35 PM IST
டேவிட் வார்னர் முச்சதமடித்து சாதனை.. ஆஸி., ஓபனரின் வேற லெவல் பேட்டிங்.. 400ஐ நோக்கி வெறித்தனமா ஆடும் வார்னர்

சுருக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் முச்சதமடித்து சாதனை படைத்துள்ளார்.   

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

முதல் நாளான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே இழந்து 302 ரன்களை குவித்திருந்தது. ஜோ பர்ன்ஸ் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 4வது ஓவரில் ஆட்டமிழந்துவிட்டார். அதன்பின்னர் வார்னரும் லபுஷேனும் சேர்ந்து அபாரமாக ஆடினர். 

முதல் நாள் ஆட்டத்தின் மூன்று செசனையும் அவர்கள் ஆடினர். இரண்டாவது செசன் மட்டும் கொஞ்ச நேரம் மழையால் பாதிக்கப்பட்டது. மற்றபடி மூன்று செசனையும் ஆடிய வார்னர் மற்றும் லபுஷேன் ஆகிய இருவருமே சதமடித்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் வார்னர் 166 ரன்களுடனும் லபுஷேன் 126 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரட்டை சதமடித்துவிட்டார் வார்னர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை விளாசிய வார்னர், அதன்பின்னர் மேலும் சிறப்பாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். இதற்கிடையே 150 ரன்களை கடந்த லபுஷேன் 162 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இரட்டை சதமடித்த வார்னருடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக் வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களை குவித்திருந்தது. வார்னர் 261 ரன்களுடனும் ஸ்மித் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டீ பிரேக் முடிந்து களத்திற்கு வந்ததுமே வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்து 36 ரன்களுக்கு ஸ்மித் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் வார்னருடன் மேத்யூ வேட் ஜோடி சேர்ந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் களத்தில் நங்கூரமிட்டு அபாரமாக ஆடிய வார்னர், முச்சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் முச்சதத்தை அடித்த வார்னர், மிகச்சிறப்பாக தொடர்ந்து ஆடிவருகிறார். 

இந்த முச்சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார் வார்னர். 

1. டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஏழாவது ஆஸ்திரேலிய வீரர் வார்னர். 

2. டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த நான்காவது ஆஸ்திரேலிய தொடக்க வீரர்.

3. பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்த நான்காவது வீரர். 

4. சர்வதேச அளவில் முச்சதமடித்த 16வது தொடக்க வீரர். 

முச்சதம் அடித்த பின்னர் பாகிஸ்தான் பவுலிங்கை தாறுமாறாக அடித்து ஆடிவருகிறார் வார்னர். எனவே 400 ரன்களை அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 600ஐ நெருங்கிவிட்டது. 

PREV
click me!

Recommended Stories

WI vs SA T20 World Cup 2026: Wi, SA போட்டியில் கவனம் செலுத்தும் இந்தியர்கள்..! சாதிக்கப்போவது யார்?
Ind Vs ZIM: இந்திய அணிக்கு ஆபத் பாண்டவராக மாறும் சேட்டன்..! மிடில் ஆர்டரில் களம் இறக்கப்படும் சஞ்சு