இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடை: வார்னரின் ரியாக்‌ஷன்

By karthikeyan VFirst Published Jul 4, 2020, 5:01 PM IST
Highlights

இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து டிக் டாக் நாயகனாக திகழ்ந்த டேவிட் வார்னர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 

இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து டிக் டாக் நாயகனாக திகழ்ந்த டேவிட் வார்னர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வந்த டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வான் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, சீனாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவில் கெடுபிடிகளை காட்ட தொடங்கியுள்ளது இந்தியா. அதன் ஒருபகுதியாக டிக் டாக், ஹெலோ, ஷேர் இட், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டிக் டாக்கில் கடந்த சில மாதங்களாக கோலோச்சிய வார்னர், டிக் டாக் தடை குறித்து கருத்து கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாததால் கிரிக்கெட் வீரர்கள் வீடுகளில் முடங்கினர். 

இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் டிக் டாக்கில் படு பிசியாக இருந்தார் வார்னர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடும் வார்னர், தெலுங்கு ரசிகர்களை கவரும் விதமாக புட்ட பொம்மா பாடல், பாகுபலி வசனம் ஆகியவற்றிற்கும் தேவர் மகன் பாடலுக்கும் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பெர்ஃபாமன்ஸ் செய்திருந்தார். அந்த வீடியோக்கள் டிக் டாக்கில் செம வைரலாகின. 

கிரிக்கெட் வீரரான வார்னர் ஏற்கனவே பிரபலம் என்பதால், அவரது வீடியோக்களுக்கு அதிகமான பார்வையாளர்களும் ஃபாலோயர்களும் கிடைத்தனர். டிக் டாக்கில் அவருக்கு 5 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தனர். 

இந்நிலையில், இந்தியாவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த வார்னர், இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. அது அரசாங்கத்தின் முடிவு. இந்திய மக்கள் அரசாங்கத்தின் முடிவுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்று வார்னர் தெரிவித்துள்ளார். 

டிக் டாக்கில் இந்திய ரசிகர்களை கவர்ந்துகொண்டிருந்த வார்னருக்கு கண்டிப்பாக இது வருத்தமளிக்கக்கூடிய விஷயம் தான்.
 

click me!