ஆல்டைம் ஐபிஎல் லெவன்.. என்னோட ஓபனிங் பார்ட்னர் அவருதான்.. டேவிட் வார்னரின் தேர்வு

By karthikeyan VFirst Published May 7, 2020, 2:51 PM IST
Highlights

ஐபிஎல்லில் ஆல்டைம் லெவன் வீரர்களை டேவிட் வார்னர் தேர்வு செய்துள்ளார். 
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் கொரோனாவால் தாமதமாகியுள்ளது. கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களுடனும், சக வீரர்களுடனும் உரையாடுவது, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது, ஆல்டைம் சிறந்த வீரர்களை தேர்வு செய்வது, பேட்டி கொடுப்பது என நேரத்தை செலவிட்டு வருகின்றனர். 

அந்த வகையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், ஐபிஎல்லில் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். டேவிட் வார்னர், தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீரர்களை தவிர வேறு எந்த நாட்டு வீரரையுமே தேர்வு செய்யவில்லை. 

தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனின் தொடக்க வீரர்களாக தன்னையும் தனக்கு பார்ட்னராக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவையும் தேர்வு செய்துள்ளார். தன்னுடன் இணைந்து கடந்த சீசனில் அசத்தலாக ஆடி எதிரணிகளை தெறிக்கவிட்ட, தனது ஐபிஎல் பார்ட்னர் ஜானி பேர்ஸ்டோவை அவர் ஒதுக்கிவிட்டார். ஆல்டைம் லெவன் அணி அல்லவா..? பேர்ஸ்டோ கடந்த சீசனில் தான் முதல் முறையாக ஆடினார். ஆல்டைம் எனும்போது நீண்டகாலமாக, சீராக ஆடிவரும், ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன் ரோஹித்தை தனது ஓபனிங் பார்ட்னராக வார்னர் தேர்வு செய்துள்ளார். 

மூன்றாம் வரிசையில் கோலியை தவிர யாருமே, யாருடைய நினைவிலும் வரமாட்டார்கள். எனவே மூன்றாம் வரிசை வீரர் கோலி தான். நான்காம் வரிசை வீரராக சிஎஸ்கேவின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான ரெய்னாவையும் ஆல்ரவுண்டர்களாக அதிரடி பேட்டிங் ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் மேக்ஸ்வெல்லையும் தேர்வு செய்துள்ளார். 

விக்கெட் கீப்பராகவும் ஃபினிஷராகவும் தோனியை தேர்வு செய்துள்ள வார்னர், ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், பும்ரா மற்றும் ஆஷிஸ் நெஹ்ரா ஆகிய மூவரையும் ஸ்பின்னராக குல்தீப் அல்லது சாஹல் இருவரில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் முதல் சீசனிலிருந்து இன்றுவரை ஆடிக்கொண்டிருக்கும், ஐபிஎல்லின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஷேன் வாட்சனை வார்னர் பரிசீலிக்கவில்லை. அதேபோல பொல்லார்டு, மலிங்கா, கிறிஸ் கெய்ல் ஆகிய வீரர்களையும் தேர்வு செய்யவில்லை. 

டேவிட் வார்னரின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா, மேக்ஸ்வெல், தோனி(விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பும்ரா, ஆஷிஸ் நெஹ்ரா, குல்தீப்/சாஹல்.
 

click me!