டேவிட் வார்னர் இன்று தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் நிலையில், வார்னர், தனது 2 மகள்களுடன் தேசிய கீதம் பாட வந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 2 போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, கடைசி மற்றும் 3ஆவது டெஸ்ட் போட்டி தற்போது சிட்னியில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியானது டேவிட் வார்னருக்கு முக்கியமான போட்டி. இந்த டெஸ்ட் போட்டியுடன் டேவிட் வார்னர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
Hardik Pandya Gym Video: வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ஹர்திக் பாண்டியா – வைரலாகும் வீடியோ!
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்தப் போட்டியில் ஆஸி மட்டுமின்றி பாகிஸ்தான் வீரர்களும் வார்னருக்கு ஃபேர்வெல் கொடுக்க இருக்கின்றனர். இந்த நிலையில், தான் ஆஸ்திரேலியா தேசிய கீதம் பாடும் போது வார்னர் தனது 2 மகள்களுடன் மைதானத்திற்குள் வந்துள்ளார்.
இதுவரையில் 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 இரட்டை சதங்கள், 26 சதங்கள், 36 அரைசதங்கள் உள்பட மொத்தமாக 8,695 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து ஒருநாள் தொடரிலிருந்தும் வார்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது வரையில் வார்னர் 9 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. இதில், முகமது ரிஸ்வான் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அமீர் ஜமால் 81 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
IPL 2024 Fittest Players List: 2024ல் ஐபிஎல் தொடரில் ஃபிட்டான வீரர்கள் யார் யார்?