
ஐபிஎல் 15வது சீசனில் டெல்லி கேபிடள்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 207 ரன்களை குவித்தது. தனது பழைய அணியான சன்ரைசர்ஸுக்கு எதிராக வெறித்தனமாக பேட்டிங் ஆடிய வார்னர் 58 பந்தில் 92 ரன்களை குவித்தார். ரோவ்மன் பவலும் அதிரடி அரைசதம் அடித்தார்.
வார்னர் மற்றும் பவலின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 207 ரன்களை குவித்த டெல்லி அணி, சன்ரைசர்ஸை 186 ரன்களுக்கு சுருட்டி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதை வார்னர் வென்றார். இது வார்னரின் 18வது ஐபிஎல் ஆட்டநாயகன் விருது. இதன்மூலம், ஐபிஎல்லில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் தோனியை முந்திய வார்னர், 4ம் இடத்தை ரோஹித்துடன் (18 முறை) 3ம் இடத்தை பகிர்ந்துள்ளார்.
இந்த பட்டியலில் 25 முறை ஆட்டநாயகன் விருதை வென்ற ஏபி டிவில்லியர்ஸ் இந்த பட்டியலில் முதலிடத்திலும், 22 முறை விருதை வென்ற கெய்ல் 2ம் இடத்திலும் உள்ளனர்.