இதுவரை யாருமே தேர்வு செய்திராத வித்தியாசமான டீம்..! சமகாலத்தின் பெஸ்ட் டெஸ்ட் லெவன்

By karthikeyan VFirst Published Sep 4, 2020, 3:26 PM IST
Highlights

சமகாலத்தின் சிறந்த டெஸ்ட் லெவன் காம்பினேஷனை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் தேர்வு செய்துள்ளார்.
 

முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஆல்டைம் சிறந்த லெவன், சமகாலத்தின் சிறந்த லெவன் ஆகிய அணிகளை தேர்வு செய்வது வழக்கம். அந்தவகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் கோவர், சமகாலத்தின் பெஸ்ட் டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.

சமகாலத்தின் சிறந்த டெஸ்ட் லெவனில், சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரையுமே அணியில் தேர்வு செய்துள்ளார். இதுவரை சமகாலத்தின் பெஸ்ட் டெஸ்ட் லெவனை தேர்வு செய்த யாருமே, இவர்கள் நால்வரையுமே சேர்த்து எடுத்ததில்லை. ஏனெனில் இவர்களில் யாருமே டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் கிடையாது. ஆனால் டேவிட் கோவர் அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தலைசிறந்த வீரர்கள் நால்வரையும் தனது லெவனில் தேர்வு செய்துள்ளார்.

ஆல்ரவுண்டராக இங்கிலாந்தின் மேட்ச் வின்னர் பென் ஸ்டோக்ஸையும், விக்கெட் கீப்பராக ஜோஸ் பட்லரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர்களாக, டெஸ்ட்  கிரிக்கெட்டில் கோலோச்சி கொண்டிருக்கும் அஷ்வின் மற்றும் நேதன் லயன் இருவரையும், அவர்களுடன் கூடுதலாக, பெயர் குறிப்பிடாமல் ஒரு லெக் ஸ்பின்னரை எடுக்கலாம் என்ற டேவிட் கோவர், ஃபாஸ்ட் பவுலராக பாட் கம்மின்ஸையும் அவருடன் வேறு யாராவது ஒரு ஃபாஸ்ட் பவுலர் என்று சொல்லிவிட்டார்.

இந்த அணிக்கு விராட் கோலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

டேவிட் கோவர் தேர்வு செய்த சமகாலத்தின் சிறந்த டெஸ்ட் லெவன்:

விராட் கோலி(கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நேதன் லயன், பாட் கம்மின்ஸ், லெக் ஸ்பின்னர்(பெயர் குறிப்பிடவில்லை), ஃபாஸ்ட் பவுலர்(பெயர் குறிப்பிடவில்லை).
 

click me!