டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த 2 அணிகள் மோதும்..? டேனிஷ் கனேரியா கணிப்பு

By karthikeyan VFirst Published Jul 18, 2021, 6:23 PM IST
Highlights

டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த 2 அணிகள் மோதும் என்று பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர்  17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டி20 உலக கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று விவரம்:

க்ரூப் 1 - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஏ பிரிவின் வின்னர், பி பிரிவின் ரன்னர்.

க்ரூப் 2 - இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தா, பி பிரிவின் வின்னர், ஏ பிரிவின் ரன்னர்.

இந்நிலையில், டி20 உலக கோப்பை ஃபைனலில் எந்த 2 அணிகள் மோதும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, க்ரூப் 1ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்று ஃபைனலுக்கு முன்னேறும். வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய விதத்தை பார்க்கையில், டி20 உலக கோப்பையில் மிகக்கடுமையான போட்டியாளராக இருக்கும்.

க்ரூப் 2லிருந்து இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறும். ஃபைனலுக்கு முன்னேறும். டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஐபிஎல் நடப்பது இந்திய அணிக்கு பெரிய பலமாக அமையும் என்று டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!