டிவில்லியர்ஸ் மட்டும் இல்லைனா இவருதாங்க ”மிஸ்டர் 360”.. டேல் ஸ்டெய்ன் புகழாரம்

By karthikeyan VFirst Published Dec 30, 2019, 5:18 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ், மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பந்தை அடிக்கக்கூடியவர் என்பதால், அவர் மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்படுகிறார். 
 

மிஸ்டர் 360 என்றழைக்கப்படும் டிவில்லியர்ஸுக்கு மேக்ஸ்வெல் சற்றும் குறைந்தவர் இல்லை என்று அவரை புகழ்ந்துள்ளார் டேல் ஸ்டெய்ன். டிவில்லியர்ஸுடன் தென்னாப்பிரிக்க அணியில் ஆடிய அவரது சக வீரரும், சிறந்த ஃபாஸ்ட் பவுலருமான டேல் ஸ்டெய்ன், மேக்ஸ்வெல்லை வெகுவாக புகழ்ந்துள்ளார். 

டிவில்லியர்ஸ் மாதிரி ஒரு வீரர் இல்லையென்றால், மேக்ஸ்வெல் தான் மிஸ்டர் 360 டிகிரி என அழைக்கப்பட்டிருப்பார் என்று புகழ்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய டேல் ஸ்டெய்ன், டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் பந்தை தெளிவாகவும் அபாரமாகவும் அடித்து ஆடக்கூடிய வெகு சிலரில் மேக்ஸ்வெல்லும் ஒருவர். அவர் ரொம்ப ஸ்மார்ட். டிவில்லியர்ஸ் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு சற்றும் சளைத்தவரல்ல மேக்ஸ்வெல். டிவில்லியர்ஸ் மாதிரி வீரர் மட்டும் இல்லையென்றால், மேக்ஸ்வெல் தான் மிஸ்டர் 360 டிகிரி என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் ஆகியிருப்பார் என்று ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். 

கடந்த பத்தாண்டில் மிகச்சிறந்த டி20 வீரர்களில் மேக்ஸ்வெல்லும் ஒருவர். அவர் இல்லாத பத்தாண்டின் சிறந்த டி20 அணியை தேர்வு செய்ய முடியாது. டி20 கிரிக்கெட்டில் 160 ஸ்டிரைக் ரேட்டுடன் 3 சதங்கள் மற்றும் 7 அரைசதங்களை அடித்துள்ள மேக்ஸ்வெல், ஐபிஎல், பிக்பேஷ் லீக் ஆகிய டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். அடுத்த ஐபிஎல் சீசனுக்குக்கூட அவரை பஞ்சாப் அணி ரூ.10.75 கோடிக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது. நடந்துவரும் பிக்பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல் இருக்கிறார். அந்த அணியில் தான் டேல் ஸ்டெய்னும் ஆடிவருகிறார். 
 

click me!