ஒரு இந்திய வீரர் கூடவா ஒர்த் இல்ல..? டிவில்லியர்ஸையே உதறிய அதிர்ச்சி.. இது கொஞ்சம் ஓவர் தான் டேல் ஸ்டெய்ன்

By karthikeyan VFirst Published May 1, 2020, 5:40 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவின் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர், தன்னுடன் மற்றும் தனக்கு எதிராக ஆடிய சிறந்த வீரர்களை கொண்ட ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். போட்டிகள் எதுவும் இல்லாததால் கிரிக்கெட் வீரர்களும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்து பொழுதுபோக்கி வரும் கிரிக்கெட் வீரர்கள், தங்களது ஆல்டைம் லெவனை தேர்வு செய்துவருகின்றனர். 

அந்தவகையில், தென்னாப்பிரிக்காவின் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன், தன்னுடன் ஆடிய மற்றும் தனக்கு எதிராக ஆடிய வீரர்களில் சிறந்த வீரர்களை கொண்ட ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார்.

அந்த ஆல்டைம் லெவனில் அதிர்ச்சிகரமாக ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. டேல் ஸ்டெய்ன், இலங்கையின் முன்னாள் கேப்டனும் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்கராவை தேர்வு செய்துள்ளார். அவருடன் தொடக்க வீரராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் க்ரேம் ஸ்மித்தை தேர்வு செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் லெஜண்ட் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டரான ஜாண்டி ரோட்ஸ், தென்னாப்பிரிக்க அணியின் தற்போதைய கேப்டனும் இளம் வீரருமான குயிண்டன் டி காக், ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் பால் ஹாரிஸ் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் ஆலன் டொனால்ட் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். 

தனது சர்வதேச கிரிக்கெட் கெரியரில் அதிகமான காலம் உடன் ஆடிய ஜாம்பவான் பேட்ஸ்மேனும் முன்னாள் கேப்டனுமான டிவில்லியர்ஸை கூட ஸ்டெய்ன் தேர்வு செய்யவில்லை. அதேபோல ஒரு இந்திய வீரரைக்கூட தேர்வு செய்யவில்லை. 

விராட் கோலியுடன் ஆர்சிபியில் ஸ்டெய்ன் ஆடியிருக்கிறார். அதேபோல சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், தோனி, ரோஹித் சர்மா ஆகிய சிறந்த இந்திய வீரர்கள், ஸ்டெய்னுக்கு எதிராக ஆடியிருக்கிறார்கள். ஆனால் இந்திய வீரர்களில் ஒருவரை கூட ஸ்டெய்ன் தேர்வு செய்யவில்லை. டிவில்லியர்ஸையே தேர்வு செய்யவில்லை. இந்திய வீரர்கள் எம்மாத்திரம்?

டேல் ஸ்டெய்ன் தேர்வு செய்த தன்னுடன் ஆடிய மற்றும் தனக்கு ஆடிய ஆல்டைம் லெவன்:

குமார் சங்கக்கரா, க்ரேம் ஸ்மித், டேவ் ஹாக்கன், ஜாக் காலிஸ், ஜாண்டி ரோட்ஸ், குயிண்டன் டி காக், ப்ரெட் பார்கியாச்சி, பீட்டர் லாம்போர்டு, பிரெட் லீ, பால் ஹாரிஸ், ஆலன் டொனால்ட்.
 

click me!