என்னோட ஆல்டைம் ஃபேவரைட் கிரிக்கெட் வீரர் அவரு ஒருத்தர் தான்.. டேல் ஸ்டெய்ன் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 20, 2020, 11:04 AM IST
Highlights

தென்னாப்பிரிக்க அணியின் ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் தனக்கு மிகவும் பிடித்தமான கிரிக்கெட் வீரர் யார் என்று தெரிவித்துள்ளார். 
 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணியில் 2004ம் ஆண்டு அறிமுகமான டேல் ஸ்டெய்ன் கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். டி20 போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 16 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் ஆடிவரும் டேல் ஸ்டெய்ன், நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவராக திகழ்கிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளிலும் 125 ஒருநாள் போட்டிகளிலும் 47 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவராக திகழ்கிறார். டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் டேல் ஸ்டெய்ன் ஆடுவதற்கான வாய்ப்புள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் கூட ஸ்டெய்ன் ஆடினார். 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் அவரது ஃபேவரைட் கிரிக்கெட்டர் யார் என்ற கேள்விக்கு, டிவில்லியர்ஸ் தான் எனக்கு மிகவும் பிடித்த ஆல்டைம் கிரிக்கெட் வீரர் மற்றும் மிகச்சிறந்த நண்பரும் கூட என்று ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். 

ஸ்டெய்னும் டிவில்லியர்ஸும் தென்னாப்பிரிக்க அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக ஆடியவர்கள். ஐபிஎல்லிலும் இருவரும் ஆர்சிபி அணிக்காக ஆடுகின்றனர். டிவில்லியர்ஸின் கேப்டன்சியில் ஸ்டெய்ன் ஆடியிருக்கிறார். 2015 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி டிவில்லியர்ஸின் தலைமையில் தான் ஆடியது.

மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பந்தை பறக்கவிடக்கூடிய திறமையான பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ். அதனால் ரசிகர்களால் மிஸ்டர் 360 என்று அழைக்கப்படுபவர். தென்னாப்பிரிக்க வீரரான அவர், தென்னாப்பிரிக்காவை கடந்து இந்தியா உட்பட உலகம் முழுதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். 

Also Read - நம்ம ஒதுங்குறத பார்த்து பதுங்குறம்னு நெனச்சிட்டாங்க போல.. புஜாரா கடும் பாய்ச்சல்

டிவில்லியர்ஸ் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, அசாத்தியமான ஃபீல்டிங்குகளை செய்யக்கூடிய அபாரமான ஃபீல்டரும் கூட. விக்கெட் கீப்பிங்கும் செய்ய வல்லவர். சிறந்த பேட்ஸ்மேன், அபாரமான ஃபீல்டர், நல்ல விக்கெட் கீப்பர், சிறந்த கேப்டன் என ஒரு முழுமையான கிரிக்கெட்டராக திகழ்ந்தவர் டிவில்லியர்ஸ். ஆல்டைம் பெஸ்ட் கிரிக்கெட்டர்களில் கண்டிப்பாக டிவில்லியர்ஸும் ஒருவர். டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெய்னுக்கு மட்டுமல்ல, கோடான கோடி ரசிகர்களின் ஃபேவரைட் கிரிக்கெட்டரும் கூட...

click me!