இப்ப இருப்பவர்களில் உங்களுக்கு பிடித்த ஃபாஸ்ட் பவுலர் யார்..? ஸ்டெய்னின் அதிரடியான பதில்.. பும்ரா இல்ல யாருன்னு பாருங்க

By karthikeyan VFirst Published Dec 22, 2019, 1:33 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன், இப்போது இருக்கும் பவுலர்களில் தனக்கு பிடித்த பவுலர் யார் என்று தெரிவித்துள்ளார். 
 

தென்னாப்பிரிக்காவின் ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் டேல் ஸ்டெய்னும் ஒருவர். அதிகமான காயங்களால் அவரால் தொடர்ச்சியாக ஆடமுடியாமல் போயிற்று. 2004ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான டேல் ஸ்டெய்ன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக கோப்பைக்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 

தென்னாப்பிரிக்க அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 44 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஸ்டெய்ன், டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். 

அண்மையில், தென்னாப்பிரிக்காவில் நடந்த மெசான்ஸி சூப்பர் லீக் தொடரில் அபாரமாக பந்துவீசினார் ஸ்டெய்ன். கடந்த சீசனில் ஆர்சிபி அணியில், தொடரின் இடையே வந்து இணைந்த ஸ்டெய்ன், சிறப்பான தனது பங்களிப்பை அளித்தார். ஆனாலும் அவரை ஆர்சிபி அணி கழட்டிவிட்டது. கழட்டிவிட்ட ஆர்சிபி அணியே, அவரை அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

இதையடுத்து மீண்டும் கோலி தலைமையிலான ஆர்சிபி படையில் இணையவுள்ள டேல் ஸ்டெய்ன், டுவிட்டரில், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, எந்த அணி சிறந்த பவுலிங் அணி என்ற கேள்விக்கு எந்தவித தயக்கமுமின்றி இந்திய அணி தான் என்றார். இந்திய அணி, பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் என அனைத்துவிதமான பவுலர்களுடன் மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டாக திகழ்கிறது. 

தற்போதைய பவுலர்களில், உங்களுக்கு பிடித்த பவுலர் யார் என்ற கேள்விக்கு, ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் பாட் கம்மின்ஸ் தான் தனக்கு பிடித்த பவுலர் என்று ஸ்டெய்ன் பதிலளித்தார். டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருப்பது பாட் கம்மின்ஸ்தான். சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பவுலராக கம்மின்ஸ் திகழ்கிறார். இந்த ஐபிஎல் ஏலத்தில் கூட அதிகமான தொகைக்கு ஏலம் போனது அவர் தான். ரூ.15.5 கோடிக்கு ஏலம்போன கம்மின்ஸ் தான், ஐபிஎல் வரலாற்றில் அதிகமான தொகைக்கு ஏலம்போன வெளிநாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!