கோலி அவரது ஐபிஎல் கெரியரை ஆர்சிபி அணியில் முடிக்கமாட்டார்.. அந்த அணியில் தான் முடிப்பார்..! ஸ்டெய்ன் கணிப்பு

By karthikeyan VFirst Published Sep 21, 2021, 5:48 PM IST
Highlights

விராட் கோலி அவரது ஐபிஎல் கெரியரை எந்த அணியுடன் முடிப்பார் என்று டேல் ஸ்டெய்ன் கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல் தொடங்கிய 2008ம் ஆண்டிலிருந்தே விராட் கோலி ஆர்சிபி அணியில் தான் ஆடிவருகிறார். ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ஒரே அணியில் ஆடிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான கோலி, ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக 200வது போட்டியை நேற்று கேகேஆருக்கு எதிராக ஆடினார்.

ஐபிஎல்லில் ஒரே அணிக்காக 200 போட்டிகளை ஆடிய வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. ஆர்சிபி அணியின் செல்லப்பிள்ளையாக திகழும் விராட் கோலி, 2013ம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் கேப்டனாகவும் இருந்துவருகிறார். 

இதுவரை 8 சீசன்களில் ஆர்சிபி அணியை வழிநடத்தியுள்ள விராட் கோலி, ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இது அவர் மீதான விமர்சனமாக தொடர்ந்துவருகிறது. அதேபோல இந்திய அணிக்கும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று கொடுக்கவில்லை என்ற விமர்சனம் கோலி மீதான அழுத்தத்தை அதிகரிக்க, அது அவரது பேட்டிங்கை பாதித்தது. 

எனவே கடந்த 2 ஆண்டுகளாக சரியாக பேட்டிங் ஆடாமல் திணறிவரும் கோலி, தனது பணிச்சுமையை குறைத்து பேட்டிங்கில் கவனம் செலுத்தும்  விதமாக டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கடந்த 16ம் தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்த ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின்  கேப்டன்சியிலிருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்தார் கோலி.

ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினாலும், கடைசிவரை ஆர்சிபி அணியில் மட்டுமே ஆடப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விராட் கோலி குறித்து பேசியுள்ள டேல் ஸ்டெய்ன், சில விமர்சனங்களும் தாக்குதல்களும் எழுவதற்கு முன்பாகவே தவிர்க்கும் விதமாக இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து கோலி விலகியிருக்கலாம். அதேபோல இன்னும் 2-3 இன்னிங்ஸ்களில் பேட்டிங் சரியாக ஆடவில்லை என்றால், ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகவேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எழலாம். எனவே, அதுவும் என் மனதில் இருக்கத்தான் செய்தது என்பதை காட்டும் விதமாக ஆர்சிபி அணியின் கேப்டன்சியிலிருந்தும் அவர் விலகியிருக்கலாம்.

எப்படிப்பட்ட பிளேயர் என்பதெல்லாம் இங்கே யாருக்கும் விஷயமல்ல. கிறிஸ் கெய்லையே ஒரு அணி தூக்கி போட்டதை பார்த்திருக்கிறோம். டேவிட் பெக்காம் மான்செஸ்டார் யுனைடெட்-ல் இருந்து வெளியேறியிருக்கிறார். எனவே யாருக்கு வேண்டுமானால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விராட் கோலி டெல்லியை சேர்ந்தவர். எனவே உங்களது(கோலி) ஐபிஎல் கெரியரை எங்கள் அணியுடன் முடியுங்கள் என்று கோலியிடம் டெல்லி அணி கேட்டுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றார் டேல் ஸ்டெய்ன்.
 

click me!