#PBKSvsCSK தோற்றாலும் ஜெயித்தாலும் மீசைய முறுக்கு; செம கெத்தா இறங்கிய சிஎஸ்கே! பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Apr 16, 2021, 7:43 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பஞ்சாப் கிங்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் தோற்றிருந்தாலும், சிஎஸ்கே அணி அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது. 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர் இல்லை என்பதை சிலர் ஒரு குறையாக பேசியபோதிலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், தங்கள் அணி காம்பினேஷன் மீது நம்பிக்கை வைத்து சிஎஸ்கே அணி அதே ஆடும் லெவனுடன் களமிறங்கியுள்ளது.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபஃப் டுப்ளெசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, சாம் கரன், பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், ஷாருக்கான், ஜெய் ரிச்சர்ட்ஸன், முருகன் அஷ்வின், ரிலே மெரிடித், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
 

click me!