IPL 2021 #DCvsCSK முதல் தகுதிச்சுற்று போட்டி: சிஎஸ்கே அணியில் செல்லப்பிள்ளைக்கு இடம் இல்லை..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Oct 10, 2021, 7:29 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்து பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் இன்று துபாயில் நடக்கும் போட்டியில் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆடுகிறது. சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரிப்பல் படேலுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் டாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், டாம் கரன், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்க்யா, ஆவேஷ் கான்.
 

click me!