பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடேவில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல்லின் 1000வது போட்டி அது.
பிற்பகல் 3.30 மணிக்கு நடக்கும் போட்டியில் சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இந்த போட்டி ஐபிஎல்லின் 999வது போட்டி ஆகும். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் ஆடாத ஹர்ப்ரீத் பிரார் இந்த போட்டியில் ஆடுகிறார்.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
அதர்வா டைட், ஷிகர் தவான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், சிக்கந்தர் ராஸா, சாம் கரன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.