CSK Success Meet: சென்னையை கலக்கிய தல - தளபதி சந்திப்பு... சி.எஸ்.கே பாராட்டு விழாவின் டாப் மொமண்ட்ஸ்

By manimegalai aFirst Published Nov 20, 2021, 7:19 PM IST
Highlights

விழாவில் பேசிய தோனி தனது கடைசி போட்டி சென்னையில் தான் ஆடுவேன் என்று கூறியதோடு, அது அடுத்த ஆண்டு கூட நடக்கலாம் அல்லது 5 ஆண்டுகள் கழித்து கூட நடக்கலாம் என தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் அண்மையில் துபாயில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது. இது சென்னை அணி பெறும் 4வது ஐபிஎல் கோப்பை ஆகும். முன்னதாக 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றிருந்தது. 

ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற சி.எஸ்.கே அணிக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்பட சி.எஸ்.கே வீரர்கள் கலந்துகொண்டனர். 

இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, எம்.எஸ்.தோனி  ஜெர்சி ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார். அந்த ஜெர்சியில் MK Stalin என பெயர் அச்சடிக்கப்பட்டிருந்ததோடு, தோனியின் பேவரைட் நம்பரான 7 அதில் இடம்பெற்று இருந்தது.

இந்த விழாவில் பேசிய தோனி தனது கடைசி போட்டி சென்னையில் தான் ஆடுவேன் என்று கூறியதோடு, அது அடுத்த ஆண்டு கூட நடக்கலாம் அல்லது 5 ஆண்டுகள் கழித்து கூட நடக்கலாம் என தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இங்கு நான் தோனி ரசிகராக வந்திருக்கிறேன்.. என் அப்பா கலைஞரும் தோனி ரசிகர் தான். தமிழர்கள் அனைவரும் பச்சைத் தமிழர் என்றால் தோனி மஞ்சள் தமிழர். அவர் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை” என ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சி.எஸ்.கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், "சென்னை அணியில் தோனி தொடர்ந்து நீடிப்பார்" என கூறினார். பின்னர் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “தோனி, சிஎஸ்கே அணியின் முதுகெலும்பு என்றும் தலைசிறந்த கேப்டன் எனவும் புகழாரம் சூட்டினார். 

click me!