
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே அணி படுமோசமாக ஆடிவருகிறது. தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, இந்த சீசனில் ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் ஆடிவரும் சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5 தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய 9ம் இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணி இந்த சீசனில் படுதோல்விகளை அடைந்துவரும் நிலையில், அது போதாது என்று சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆடம் மில்னே காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகினார்.
ஆடம் மில்னே விலகியது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால் அதை ஈடுகட்டும் வகையில், அவருக்கு மாற்றாக தரமான ஃபாஸ்ட் பவுலரை ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே அணி.
அண்மையில் வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த அண்டர் 19 உலக கோப்பையில் இலங்கை அணியில் இடம்பிடித்து அருமையாக பந்துவீசி 4 போட்டிகளில் 7 விக்கெட் வீழ்த்திய அண்டர் 19 ஃபாஸ்ட் பவுலர் மதீஷா பதிரனாவை ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே அணி.
இலங்கை அண்டர் 19 ஃபாஸ்ட் பவுலரான மதீஷா, இலங்கை லெஜண்ட் மலிங்காவை போன்ற பவுலிங் ஆக்ஷனை கொண்டவர். அருமையான ஃபாஸ்ட் பவுலரான மதீஷாவின் சேர்க்கை, சிஎஸ்கே அணிக்கு மிகவும் நல்ல விஷயம்.