டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு..! ஓரங்கட்டப்பட்ட 2 சீனியர் வீரர்கள்

Published : Sep 09, 2021, 09:44 PM IST
டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு..! ஓரங்கட்டப்பட்ட 2 சீனியர் வீரர்கள்

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

டி20 உலக கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. நியூசிலாந்து அணி முதல் அணியாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் அறிவிக்கப்பட்டன. 

அவற்றை தொடர்ந்து தற்போது டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெம்பா பவுமா தலைமையில் 15 வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் சீனியர் வீரர்களான ஃபாஃப் டுப்ளெசிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

டி20 உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி:

டெம்பா பவுமா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), ஜோர்ன் ஃபார்ச்சூன், ரீஸா ஹென்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளாசன், கேஷவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி இங்கிடி, அன்ரிக் நோர்க்யா, ட்வைன் ப்ரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷாம்ஸி, ராசி வாண்டெர் டசன்.

ரிசர்வ் வீரர்கள் - ஜார்ஜ் லிண்டே, அண்டில் ஃபெலுக்வாயோ, லிஸாட் வில்லியம்ஸ்.
 

PREV
click me!

Recommended Stories

Most T20 Centuries: டி20-ல் அதிக சதம்..! கோலியின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்..!
Abhishek Sharma: டெல்லிக்கு தண்ணி காட்டிய அபிஷேக் சர்மா.. 10 சிக்ஸர்களுடன் செஞ்சுரி..!