கிறிஸ் லின்னின் அடுத்த அதிரடி.. நேரடியாக ஃபைனலுக்கு நுழைந்த மராத்தா அரேபியன்ஸ்

By karthikeyan VFirst Published Nov 24, 2019, 12:41 PM IST
Highlights

கிறிஸ் லின்னின் அதிரடியான பேட்டிங்கால், அபுதாபி டி10 லீக் தொடரின் தகுதிச்சுற்றில் வென்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது மராத்தா அரேபியன்ஸ் அணி. 
 

கேகேஆர் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கிறிஸ் லின், அபுதாபி டி10 லீக் தொடரில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார் லின்.

மராத்தா அரேபியன்ஸ் அணியில் ஆடிவரும் கிறிஸ் லின், அதிரடியாக பேட்டிங் ஆடி லீக் சுற்றில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்கு வெற்றிகளை குவித்து தகுதிச்சுற்றில் நுழைய உதவினார். லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் டாப்பில் இருந்ததால், முதல் தகுதிச்சுற்று போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணியும் காலண்டர்ஸ் அணியும் மோதின. 

முதலில் அரேபியன்ஸ் அணி பேட்டிங் ஆடியது. வழக்கம்போலவே இந்த போட்டியிலும் எதிரணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார் கிறிஸ் லின். அதிரடியாக ஆடிய அவர் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 67 ரன்களை குவித்தார். ஆடம் லித் தன் பங்கிற்கு 15 பந்தில் 28 ரன்கள் அடித்தார்.

 

கிறிஸ் லின்னின் அதிரடியான பேட்டிங்கால், மராத்தா அரேபியன்ஸ் அணி, 10 ஓவரில் 119 ரன்களை குவித்தது. 120 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய காலண்டர்ஸ் அணி 20 ஓவரில் 112 ரன்களை அடித்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அந்த அணி அசால்ட்டாக தோற்கவில்லை. கடுமையாக போராடியே தோற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறிய மராத்தா அரேபியன்ஸ் அணி, இரண்டாவது தகுதிச்சுற்றில் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்த டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியுடன் மோதுகிறது. 

click me!