தோனியை விடுவிக்கிறது சிஎஸ்கே..? ரசிகரின் டுவீட்டுக்கு சிஎஸ்கேவின் ஸ்மார்ட் பதிலடி

By karthikeyan VFirst Published Nov 16, 2019, 5:20 PM IST
Highlights

ஐபிஎல்லில் இதுவரை நடந்த 12 சீசன்களில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. கடந்த சீசனிலும் கோப்பையை வென்றிருக்க வேண்டிய சிஎஸ்கே அணி, நூலிழையில் தவறவிட்டது. 

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்று, தோனி தலைமையிலான சிஎஸ்கே. இதுவரை நடந்த 12 சீசன்களில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. கடந்த சீசனிலும் கோப்பையை வென்றிருக்க வேண்டிய சிஎஸ்கே அணி, நூலிழையில் தவறவிட்டது. இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை இழந்தது. 

ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திவரும் சிஎஸ்கே அணி, சீசனுக்கு சீசன் ஏகப்பட்ட மாற்றங்களை எப்போதுமே செய்ததில்லை. தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ என கோர் டீம் மிகவும் வலுவாக இருப்பதால், அந்தந்த சீசனுக்கு அணியின் திட்டத்திற்கு ஏற்ப ஒரு சில வீரர்களை மட்டுமே கழட்டிவிடவோ அல்லது புதிதாக எடுக்கவோ செய்யுமே தவிர, தேவையற்ற மாற்றங்கள் எப்போதுமே சிஎஸ்கேவில் செய்யப்பட்டதில்லை. அதற்கு காரணமே கேப்டன் தோனிதான். 

சும்மா சும்மா வீரர்களை மாற்றாமல், அவர்கள் செய்யும் தவறுகளை கலைந்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை பெற்றுவிடுவார். அதனால் வீரர்களுக்கும் இது நம்ம டீம் என்ற உணர்வு வந்துவிடுகிறது. அந்த உணர்வு வந்துவிட்டாலே வீரர்கள் தங்களது முழு திறமையையும் காட்டிவிடுவார்கள். அதுதான் சிஎஸ்கேவில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் ஆர்சிபி சொதப்புவதால்தான் அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. 

அந்தவகையில், 2020 சீசனுக்கான ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களை மட்டும் சிஎஸ்கே அணி கழட்டிவிட்டுள்ளது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் மற்றும் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி ஆகிய இருவரையும் சிஎஸ்கே கழட்டிவிட்டது. இவர்கள் தவிர மோஹித் சர்மா, த்ருவ் ஷோரே மற்றும் சைதன்யா பிஷ்னோய் ஆகியோரையும் சிஎஸ்கே கழட்டிவிட்டுள்ளது. 

தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ, வாட்சன், ராயுடு, முரளி விஜய், தீபக் சாஹர் ஆகிய வீரர்களை தக்கவைத்துள்ளது. இந்நிலையில், தோனியை சிஎஸ்கே கழட்டிவிட இருப்பதாக, அணிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்றும் குட்பை சென்னை என்றும் ஒரு ரசிகர் டுவீட் செய்திருந்தார். அதாவது தோனி சிஎஸ்கேவிற்கு குட்பை சொல்வது போல டுவீட்டியிருந்தார்.

தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வே பெற்றாலும் சிஎஸ்கேவில் ஏதாவது ஒருவகையில் அங்கம் வகிப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படியிருக்கையில், ரசிகரின் அந்த டுவீட்டை பார்த்துக்கொண்டு சும்மார் இருக்குமா சிஎஸ்கே..? ரசிகரின் டுவீட்டுக்கு, சிஎஸ்கே பதிலடி கொடுத்துள்ளது. 

தோனியை கழட்டிவிடுவதாக சிஎஸ்கேவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக ரசிகர் போட்ட டுவீட்டுக்கு, அந்த நெருங்கிய வட்டாரங்களுக்கு குட்பை என்று சிஎஸ்கே பதிலளித்துள்ளது. 
 

😯 Time to say "Goodbye Close Sources"!

— Chennai Super Kings (@ChennaiIPL)
click me!