SL vs AUS: ஆஸி.,க்கு செம சர்ப்ரைஸ்.. தனி ஒருவனாக இலங்கைக்காக போராடிய கருணரத்னே..! செம பேட்டிங்

By karthikeyan VFirst Published Jun 24, 2022, 6:14 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, சாமிகா கருணரத்னேவின் பொறுப்பான அரைசதத்தால் 160 ரன்களையாவது அடித்தது. 161 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டுகிறது.
 

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 3-1 என இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.

கொழும்பில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

இலங்கை அணி:

தனுஷ்கா குணதிலகா, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தினேஷ் சண்டிமால், தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லாலகே, சாமிகா கருணரத்னே, ஜெஃப்ரி வாண்டர்சே, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்‌ஷனா. 

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், பாட் கம்மின்ஸ், மேத்யூ குனெமேன், ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 24.2 ஓவரில் 85 ரன்களுக்கே இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

சாமிகா கருணரத்னே பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடி ஸ்கோர் செய்ய, 9வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த ப்ரமோத் மதுஷன் ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட்டை இழந்துவிடாமல் பேட்டிங் ஆடினார். மதுஷன் 52 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்கள் அடிக்க, இதற்கிடையே அடித்து ஆடிய சாமிகா கருணரத்னே அரைசதம் அடித்தார். தனி ஒருவனாக பொறுப்புடன் பேட்டிங் ஆடிய சாமிகா கருணரத்னே 75 ரன்களை குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, 43.1 ஓவரில் 160 ரன்கள் அடித்தது.

கருணரத்னேவின் பொறுப்பான பேட்டிங்கால் தான் 160 ரன்களையாவது எட்டியது இலங்கை அணி. எனினும் 161 ரன்கள் என்பது எளிதான இலக்கு என்பதால் ஆஸ்திரேலிய அணி அதை அடித்துவிடும். 
 

click me!