டி20 கிரிக்கெட் தரவரிசையில் மட்டும் இந்திய அணி கீழே கிடப்பது ஏன்..? கேப்டன் கோலி அதிரடி விளக்கம்

By karthikeyan VFirst Published Dec 6, 2019, 12:15 PM IST
Highlights

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிரண்டு இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணி, டி20 கிரிக்கெட் தரவரிசையில் மட்டும் பின் தங்கியிருப்பது ஏன் என்பது குறித்து கேப்டன் கோலி விளக்கமளித்துள்ளார். 
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் 120 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 122 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான வித்தியாசம் வெறும் 3 புள்ளிகள் தான். 

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெற்றிகளை குவித்து டாப் ரேங்கிங்கில் இருக்கும் இந்திய அணி, டி20 தரவரிசையில் மட்டும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகளுக்கு அடுத்து ஐந்தாமிடத்தில் உள்ளது. 

அதற்கான காரணத்தை கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் இன்று நடக்கவுள்ள நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, அதுகுறித்து விளக்கமளித்தார். 

நாங்கள்(இந்திய அணி) முதலில் பேட்டிங் ஆடி, குறைந்த ஸ்கோரை தடுக்க பயிற்சி எடுத்து வருகிறோம். டி20 உலக கோப்பைக்கான தயாரிப்பிற்காக, குறைந்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்வதில் கவனம் செலுத்திவருகிறோம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பரிசோதனைகளை செய்ய முடியாது. டி20 கிரிக்கெட்டில் பரிசோதனைகளை செய்ய முடியும் என்பதால் அதை செய்துவருகிறோம். 

மேலும் இளம் வீரர்களுக்கு டி20 போட்டிகளில் வாய்ப்பளிக்க முடியும் என்பதால் இளம் வீரர்களுக்கு போதுமான அளவிற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அணியின் பெஸ்ட் 11 வீரர்களுடன் டி20 போட்டிகளில் ஆடுவதில்லை. ரேங்கிங்கை பற்றி கவலைப்படாமல் அணிக்கு தேவையான பரிசோதனைகளை செய்வதால்தான் ரேங்கிங்கில் பின் தங்கியிருக்கிறோம் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 
 

click me!