பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு புற்றுநோய் ! ரசிகர்கள் அதிர்ச்சி !!

By Selvanayagam PFirst Published Jul 20, 2019, 11:41 AM IST
Highlights

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் சேப்பல், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இயன் சேப்பல் தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். 

75 வயதான இயன் சேப்பல், 75 டெஸ்டுகளிலும் 16 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 1971 முதல் 1975 வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இயன் சேப்பல். ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த கேப்டன் என்கிற பெயரையும் எடுத்தவர்.

இந்நிலையில், தோல் புற்றுநோயால் இயன் சேப்பல் பாதிக்கப்பட்டுள்ளார். தோல்புற்றுநோய் உண்டாக முதன்மையான காரணம் புறஊதா கதிர்கள். நாள் முழுக்க வெயிலில் நின்று கிரிக்கெட் ஆடியதால் இந்தப் பாதிப்புக்கு அவர் ஆளாகியுள்ளார்.


 
இதையடுத்து அவருக்குக் கடந்த 5 வாரங்களாகக் கதிரியக்கம் மூலமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கழுத்து, தோள்பட்டையிலிருந்து தோல் புற்றுநோய்த்தன்மை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தற்போது சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான நைன் தொலைக்காட்சியின் வர்ணையாளர் குழுவில் பங்கேற்கச் சம்மதம் தெரிவித்துள்ளார் சேப்பல்.

click me!