உலக கோப்பை 2019: லெஜண்ட் பிரயன் லாரா அதிரடி.. எல்லாரும் சொல்றத தான் அவரும் சொல்லணுமா என்ன..?

By karthikeyan VFirst Published May 21, 2019, 10:31 AM IST
Highlights

உலக கோப்பை எந்த அணி வெல்லும் என்பது குறித்து பல முன்னாள் ஜாம்பவான்கள் தங்களது கருத்தை தெரிவித்துவரும் நிலையில், பிரயன் லாராவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் தான் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த உலக கோப்பை பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணி ஆகியவை சிறந்த அணிகளாக திகழ்கின்றன. இவற்றில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகின்றன. 

முன்னெப்போதும் இல்லாத வகையில் சிறந்த பவுலிங் யூனிட்டுடன் உலக கோப்பையில் ஆடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம். அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, அனைத்து வகையிலும் சிறந்த அணியாக திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. 

சொந்த மண்ணில் உலக கோப்பையில் ஆடுவது இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அந்த அணி வலுவாக உள்ள நிலையில், சொந்த மண்ணிலும் ஆடுவதால், இங்கிலாந்துக்கான வாய்ப்புதான் அதிகம் என்று கவாஸ்கர், பாண்டிங், ஸ்டீவ் வாக் போன்ற பல ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இங்கிலாந்து குறித்து பேசிய லாரா, இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புதான் அதிகம் என்று நான் சொல்லமாட்டேன். கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இங்கிலாந்தும் ஒன்று. உலக கோப்பை தொடரை நடத்தும் எந்த நாடும் சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல தீவிரமாக போராடும். அந்த வகையில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத அணியான இங்கிலாந்து, தற்போது மிகவும் வலுவான அணியாக உருவெடுத்துள்ளதால் இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்ல முனையும் என்று கூறினார். 

இந்தியாவிற்கான வாய்ப்பு குறித்து பேசிய லாரா, இந்திய அணி கோப்பையை வென்றால் யாருக்குமே அது ஆச்சரியமாக இருக்காது. இந்திய அணி அனைத்துவிதமான கண்டிஷன்களிலும் அபாரமாக ஆடிவருகிறது. சமபலம் வாய்ந்த அருமையாக அணியாக உள்ளது. அதனால் உலக கோப்பையை வென்றால், அது யாருக்குமே அதிருப்தியாகவோ அல்லது ஆச்சரியமாகவோ இருக்காது என்றார். 
 

click me!