என் சமகாலத்தின் பெஸ்ட் 5 பேட்ஸ்மேன்கள் இவங்கதான்..! பிரயன் லாரா ஓபன் டாக்.. 2 இந்தியர்களுக்கு இடம்

Published : Dec 31, 2020, 10:50 PM IST
என் சமகாலத்தின் பெஸ்ட் 5 பேட்ஸ்மேன்கள் இவங்கதான்..! பிரயன் லாரா ஓபன் டாக்.. 2 இந்தியர்களுக்கு இடம்

சுருக்கம்

முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் பிரயன் லாரா, தனது சமகால வீரர்களில் மிகச்சிறந்த டாப் ஐந்து பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார்.  

ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா. சச்சின் டெண்டுல்கருக்கு நிகராகக்கூட இல்லாமல், சச்சின் டெண்டுல்கரை விட டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார் பிரயன் லாரா. 

இடது கை பேட்ஸ்மேனான பிரயன் லாரா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 131 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 11,953 ரன்களையும் 299 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,405 ரன்களையும் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அவர் அடித்த 400 ரன்கள் என்ற சாதனையை தற்போதுவரை யாரும் முறியடிக்கவில்லை. 

ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான பிரயன் லாரா, தனது சமகாலத்தில் தான் எதிர்த்து ஆடியதில் மிகச்சிறந்த ஐந்து பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பிரயன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் மற்றும் சங்கக்கரா ஆகிய ஐவரும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று பிரயன் லாரா தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு
T20 உலகக்கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு.. சஞ்சு இன், கில் அவுட்.. BCCI அதிரடி