மத்த 10 பேரு யாரா வேணா இருந்துட்டு போகட்டும்.. ஆனால் உலக கோப்பை டீம்ல அவரு கண்டிப்பா இருக்கணும்!! பிரயன் லாரா அதிரடி

Published : Apr 06, 2019, 03:42 PM IST
மத்த 10 பேரு யாரா வேணா இருந்துட்டு போகட்டும்.. ஆனால் உலக கோப்பை டீம்ல அவரு கண்டிப்பா இருக்கணும்!! பிரயன் லாரா அதிரடி

சுருக்கம்

உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடர் நடந்துவருகிறது.   

உலக கோப்பை மே மாத இறுதியில் தொடங்குகிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடர் நடந்துவருகிறது. 

உலக கோப்பையில் ஆடும் அணிகள், அந்தந்த அணியின் 15 வீரர்களை கொண்ட அணியை அறிவிக்க வேண்டும். அதற்காக வீரர்களை தேர்வு செய்துவிட்டு கடைசி வாய்ப்பாக ஐபிஎல்லில் வீரர்கள் ஆடுவதை பார்த்துவருகின்றன.

ஐபிஎல்லை அடிப்படையாக வைத்து வீரர்கள் தேர்வு இருக்காது என்றாலும் ஒருசில வீரர்களை உறுதி செய்வதற்கு ஐபிஎல் பயன்படலாம். இதுவரை நியூசிலாந்து அணி மட்டுமே 15 வீரர்களை கொண்ட அணியை அறிவித்துள்ளது. வேறு எந்த அணியும் அறிவிக்கப்படவில்லை. 

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் ஆகிய அணிகள் வலுவாக திகழ்கின்றன. உலக கோப்பை நெருங்கிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் செம ஃபார்மில் உள்ளனர். 

குறிப்பாக கேகேஆர் அணிக்காக ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரசல், உச்சபட்ச ஃபார்மில் உள்ளார். கேகேஆர் அணியின் வெற்றி நாயகனாக திகழ்கிறார். சிறந்த ஃபினிஷராக திகழ்ந்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்கிறார். 

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளிலுமே சிறப்பாக ஆடியுள்ளார். அதிலும் ஆர்சிபி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி 4 ஓவர்களுக்கு 66 ரன்கள் தேவை என்ற நிலையில், மூன்றே ஓவர்களில் அதை அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார். 

ஆண்ட்ரே ரசலின் இன்னிங்ஸ் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாராவை வெகுவாக கவர்ந்துள்ளது. ரசலின் பேட்டிங்கை பார்த்த லாரா, உலக கோப்பை அணியில் ஆடும் லெவனில் ரசல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தக்கூடியவர் ரசல். எனவே அவர் உலக கோப்பையில் ஆடும் லெவனில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும். 

PREV
click me!

Recommended Stories

20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா
உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!