#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்..! ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி

Published : Nov 30, 2020, 10:36 PM IST
#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்..! ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி

சுருக்கம்

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக வார்னருடன் யார் இறங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.  

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி கான்பெராவில் டிசம்பர் 2ம் தேதி(நாளை மறுநாள்) நடக்கவுள்ளது.

ஒருநாள் தொடரின் வெற்றி முடிவாகிவிட்டதால், கடைசி போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியல்ல. ஆனால் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெற முயலும்.  ஆஸ்திரேலிய அணிக்கு இந்த போட்டி பெரியளவில் முக்கியமில்லை என்றாலும், இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்ய முயலும்.

2வது போட்டியில் காயமடைந்த வார்னர் கடைசி போட்டியில் ஆடமாட்டார் என்பதால் ஆரோன் ஃபின்ச்சுடன் மார்னஸ் லபுஷேன் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

மிகச்சிறந்த பேட்ஸ்மேனான லபுஷேன், முதல் ஒருநாள் போட்டியில் சரியாக ஆடவில்லை என்றாலும், 2வது போட்டியில் 70 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!